அக்டோபரில் தல 61 ஷுட்டிங்...படமே ஆரம்பிக்கல அதுக்குள்ள டிரெண்டிங்கா ?
சென்னை : நேர் கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. அஜித் போலீஸ் வேடத்தில் நடிக்கும் இந்த படம் 2 ஆண்டுகளாக அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது.
வலிமை படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஹுமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படம் தீபாவளி அல்லது இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வினோத் இயக்கும் தல 61
இந்நிலையில் தல 61 படம் பற்றி பல தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்று தான் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து அஜித்தை மூன்றாவது முறையாக தல 61 படத்தில் டைரக்டர் ஹச்.வினோத் இயக்க போகிறாராம்.

டிரெண்டில் தல 61
இந்த படம் பற்றிய உறுதியான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படாத நிலையில், தல 61 படத்தின் படப்பிடிப்பு 2021 அக்டோபரில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் Thala61 என்ற பெயரில் ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது.

3 வது முறையாக இணையும் கூட்டணி
தல 61 படத்தையும் போனி கபூர் தான் இயக்க போகிறாராம். ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட உள்ள இந்த படத்திற்கும் யுவன்சங்கர் ராஜா தான் இசையமைக்க போகிறாராம். இந்த தகவலால் மூன்றாவது முறையாக போனி கபூர், ஹச்.வினோத், அஜித் கூட்டணி இணைய உள்ளதாக அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆர்வத்தை தூண்டிய தல ரசிகர்கள்
இரண்டு ஆண்டுகளாக வலிமை அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களை திருப்திப்படுத்த ஃபஸ்ட்லுக், மோஷன் போஸ்டர் என எல்லாம் வெளியிட்டு விட்டனர். படத்தின் ரிலீசும் ஏறக்குறைய உறுதியாகி விட்டதால் அஜித் ரசிகர்கள், அஜித்தின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பை கிளப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











