நடிகராகிறாரா அனிருத் ?... சஸ்பென்ஸ் வைத்த விக்னேஷ் சிவன்
சென்னை : விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா லீட் ரோலில் நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை டைரக்டர் விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விக்னேஷ் சிவன் - அனிருத் இணையும் நான்காவது படம் இது.
இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோவுடன் இணைந்து விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. சமந்தா மற்றும் நயன்தாராவுடன் விஜய் சேதுபதி ஏற்கனவே நடித்திருந்தாலும், இந்த படத்தில் முதல் முறையாக இரு நடிகைகளுடன் ஒரே படத்தில் நடித்துள்ளார்.

காதலர் தினத்தில் ஃபஸ்ட் சிங்கிள்
நயன்தாராவும், சமந்தாவும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தில் இருவரும் சகோதரிகளாக நடிக்கிறார்களாம். இந்த படத்தின் ஃபஸ்ட் சிங்கிளான ரெண்டு காதல் பாடல் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. இந்த பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

விக்னேஷ் சிவனின் சஸ்பென்ஸ் வீடியோ
இரண்டாவது சிங்கிள் பாடல் டூ டூ டூ என துவங்குவதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு வெள்ளை நிற உடை அணிந்த இளைஞர் ஒருவர் டான்ஸ் ஆட தயாராவது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது. அவரின் கால்கள் டான்ஸ் ஸ்டெப் போடுவது போன்றும் காட்டப்பட்டுள்ளது. இதனால் யார் அந்த மர்ம மனிதர் என கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்தது.

அனிருத் நடிக்கிறாரா
அது அனிருத் தான் என ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்துள்ளனர். ஒருவேளை அந்த கணிப்பு சரியாகும் பட்சத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் மூலம் அனிருத் நடிகராகவும் அறிமுகமாக உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பாடலுக்கு மட்டும் அவர் நடனமாடலாம் என கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

அடுத்த இசையமைப்பார்
விஜய் ஆன்டனி, ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஜி.வி.பிரகாஷ் போன்றோர் இசையமைப்பாளராக புகழ்பெற்ற பிறகு நடிக்க வந்து ஹீரோ ஆனவர்கள். யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களும் சில பாடல்களில் தோன்றி நடித்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது அனிருத்தும் இசையை தொடர்ந்து, நடிப்பிலும் தடம் பதிக்க போகிறார்.


Click it and Unblock the Notifications











