அண்ணாத்த ஃபஸ்ட் சிங்கிள் இன்று வருமா... ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

சென்னை : சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டைரக்டர் சிறுத்தை சிவா, ரஜினியை வைத்து இயக்கி உள்ள படம் அண்ணாத்த. இந்த படத்தின் ஷுட்டிங் முடிந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி கிராமத்து கெட் அப்பில் நடிக்கும் படம் என்பதாலும், முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருப்பதாலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியத்தின் முதல் நினைவு நாள் இன்று. அவர் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு முன் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திற்காக ஒரு பாடலை பாடினார். அண்ணாத்த படத்தில் ரஜினியின் இன்ட்ரோ பாடலை தான் எஸ்பிபி பாடியதாக ஏற்கனவே கூறப்பட்டது.

ஆர்வத்தை தூண்டிய மோஷன் போஸ்டர்

ஆர்வத்தை தூண்டிய மோஷன் போஸ்டர்

சமீபத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இது லட்சக்கணக்கில் பார்வைகளை பெற்று, ரஜினி ரசிகர்களால் வேற லெவலில் கொண்டாடப்பட்டு வருகிறது. கையில் நீண்ட அரிவாளுடன், கொல்கத்தா பாலத்தின் மீது ரஜினி மாஸாக பைக்கில் வரும் மோஷன் போஸ்டர் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தை தூண்டி உள்ளது.

இன்று ஃபஸ்ட் சிங்கிள் வருமா

இன்று ஃபஸ்ட் சிங்கிள் வருமா

மோஷன் போஸ்டரால் படத்தின் மீதான எதிர்ப்பு அதிகரித்துள்ளதால், எஸ்பிபி.,யின் முதல் நினைவு நாளான இன்று, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர் பாடிய இன்ட்ரோ பாடலே ஃபஸ்ட் சிங்கிளாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் அண்ணாத்த ஹாஷ்டாக்கை உருவாக்கி டிரெண்டிங் ஆக்கி உள்ளனர்.

இது தான் காரணமா

இது தான் காரணமா

ஆனால் படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்த போது, அண்ணாத்த ஃபஸ்ட் சிங்கிள் இன்று வெளியிடப்படாதாம். ஃபஸ்ட் சிங்கிள் நிச்சயம் ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். ஆனால் எஸ்பிபி.,யின் முதல் நினைவு நாளில் அப்படி செய்வது சரியாக இருக்காது. அதனால் இன்று அண்ணாத்த ஃபஸ்ட் சிங்கிளை வெளியிட வேண்டாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

 அனைவரையும் கவரும் பாடல்

அனைவரையும் கவரும் பாடல்

இந்த பாடல் எஸ்பிபி பாடி உள்ள எனர்ஜிடிக்கான பாடலாம். பாசிடிவ் உணர்வை ஏற்படுத்தக் கூடிய எமோஷனல் பாடலாம். ரஜினிக்காக எஸ்பிபி பாடிய அந்த பாடல் நிச்சயம் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் என படக்குழு உறுதியாக சொல்கிறது. இதனால் படத்தின் மீதான ஆர்வம் மட்டுமல்ல எஸ்பிபி பாடிய பாடல் மீதும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

அதே சமயம் விரைவில் அண்ணாத்த ஃபஸ்ட் சிங்கிள் வெளியாகும் என படக்குழு உறுதியாக தெரிவித்துள்ளது. தேதியை முடிவு செய்த பிறகு ஃபஸ்ட் சிங்கிள் ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமாம். அதைத் தொடர்ந்து படத்தின் டீசர், டிரைலர் ஆகியன முக்கிய நாட்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.

ரிலீஸ் வேலைகள் தீவிரம்

ரிலீஸ் வேலைகள் தீவிரம்

அண்ணாத்த படம் தீபாவளி தினமான நவம்பர் 4 ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு விட்டதால் படத்தின் போஸ்ட் ப்ரொடஷன் உள்ளிட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. படத்தின் இசையமைப்பாளர் டி.இமான், டைரக்டர் சிறுத்தை சிவா உள்ளிட்டோர் அடுத்தடுத்த படங்களிலும் கமிட்டாகி பிஸியாக இருந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X