Don't Miss!
- News
"தமிழகத்தில் களமிறங்கும் பிரதமர் மோடி?" எங்கு தெரியுமா! ஓபனாக பேசிய அண்ணாமலை! அதிமுக குறித்தும் பரபர
- Automobiles
புதிய இ-பைக்கிற்காக இத்தாலி நிறுவனத்தோட இணைந்த ஒகினவா... உலகளவில் 50 டெக்னீசியன்களையும் களமிறக்க திட்டம்!
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
மாமனிதன் படத்தில் அஜித்தின் பிளாக்பஸ்டர் பட இசை...இதை யாராச்சும் கவனிச்சிங்களா?
சென்னை : டைரக்டர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக இன்று தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளது. தர்மதுரை படத்திற்கு பிறகு மீண்டும் சீனு ராமசாமி - விஜய் சேதுபதி காம்போ இணைந்துள்ள படம்.
சமீப காலமாக விஜய் சேதுதியை வில்லனாக பார்த்த ரசிகர்களுக்கு, ஒரு மாறுபட்ட விஜய் சேதுபதியை மாமனிதன் படத்தில் காட்டி உள்ளார் சீனு ராமசாமி. நேர்மையான ஆட்டோ டிரைவராக, கிராமத்தில் வாழும் குடும்ப தலைவனாக, இரண்டு குழந்தைகளின் கல்வி வசதிக்காக போராடும் அப்பாவாக காட்டப்பட்டுள்ளார்.
தர்மதுரை படத்தின் வெற்றி பெற்றதுமே சீனு ராமசாமியின் மாமனிதன் படத்தில் தயாரித்து விட்டார். விஜய் சேதுபதியும் நடிப்பதாக ஒப்புக் கொண்டு, 2017 ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது.
3டியில்
உருவாகும்
விக்ரம்
-
பா.ரஞ்சித்
படம்..
டைட்டில்
இதுதானா?
வெளியான
சீக்ரெட்!

முடங்கி கிடந்த மாமனிதன்
2018 ம் ஆண்டு துவங்கிய மாமனிதன் படத்தின் ஷுட்டிங் 60 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு சீனு ராமசாமிக்கு இடையேயான பிரச்சனை காரணமாக படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்தது. ஒரு கட்டத்தில் இந்த படம் கைவிடப்பட்டதாகக் கூட தகவல் பரவியது.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம்
ஆனால் படத்தின் இசையமைப்பாளரான யுவன்சங்கர் ராஜா, தனது ஒய்எஸ்ஆர் ப்ரொடக்ஷன்ஸ் மூலம் தயாரிப்பு பொறுப்பை ஏற்று, படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் இறங்கினார். கிட்டதட்ட 4 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு இன்று மாமனிதன் படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டு, பாசிடிவ் விமர்சனங்களையும் பெற்றுள்ளது. ரசிகர்களுக்கும் மாமனிதன் படம் பிடித்திருக்கிறது.

நல்ல படங்களை மக்கள் ஆதரிப்பார்கள்
தங்களின் வாழ்க்கையோ எங்கோ ஒரு இடத்தில் மாமனிதன் படம் கனெக்ட் ஆவதாகவும், படத்தை பார்க்கும் போது இது போல் நமது வாழ்க்கையிலும் நடத்திருக்கிறதே...நாமும் இப்படி செய்திருக்கலாமோ என்ற எண்ணம் மனதில் வந்து போகிறது என்பதே சாமாணிய மக்களில் பெரும்பாலானவர்கள் சொல்லும் கமெண்ட்டாக உள்ளது. விஜய் சேதுபதியின் இந்த மாறுபட்ட அவதாரத்தை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

மாமனிதனில் மங்காத்தா படமா
இந்த சமயத்தில் மாமனிதன் படத்தில் அஜித்தின் 50வது படமான மங்காத்தா படத்தில் reference இருப்பதை ரசிகர்கள் கண்டுபிடித்து சுட்டிக்காட்டி வருகின்றனர். அதாவாது படத்தின் டை்டில் கார்டில் ஒய்எஸ்ஆர் ப்ரொடக்ஷன்ஸ் என்ற கார்டு போடும் போது, மங்காத்தா படத்தில் பிஜிஎம் இசை இடம் பெறுகிறது. மங்காத்தா படத்திற்கும் யுவன் தான் இசையமைத்திருந்தார். அவரின் இசை படத்திற்கு மிகப் பெரிய பிளஸ் ஆக அமைந்திருந்தது.

தனுஷ், சிவா கூட தான் செய்யுறாங்க
ஏற்கனவே தனுஷின் ஒன்டர்பார் மூவிஸ் தயாரிக்கும் படங்களில் வேலையில்லா பட்டதாரி படத்தின் பிஜிஎம் இசை இசைக்கப்பட்டு வருகிறது. இதே போல் சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படங்களிலும் டைட்டில் கார்டு போடும் போது சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் தீம் மியூசிக் பயன்படுத்தப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது யுவனின் தயாரிப்பு நிறுவனத்தின் படத்திற்கு மங்காத்தா தீம் மியூசிக்கை பயன்படுத்தி உள்ளனர்.

மாமனிதனின் பெரிய ப்ளஸ்
மாமனிதன் படத்தின் பிளஸ்சாக பார்க்கப்படும் விஷயங்கள் முக்கியமான ஒன்று, இந்த படத்தில் இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன்சங்கர் ராஜா முதல் முறையாக ஒன்றாக இணைந்து இசையமைத்துள்ளனர். கார்த்திக் ராஜாவும் கூட இந்த படத்தின் இசையை உருவாக்க இணைந்து பணியாற்றியதாக கூறப்படுகிறது.