மீண்டும் ஒளிபரப்பாகும் பாவனியின் சின்னதம்பி...நிறுத்தப்படுகிறதா பாரதி கண்ணம்மா சீரியல்
சென்னை : தமிழ் டிவி சேனல்களில் பல சீரியல்கள் பல கால கட்டங்களில் பிரபலமாக இருந்து வந்துள்ளன. அப்படி வினய் டிவி.,யில் மிக பிரபலமாக ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று சின்னதம்பி. பிரஜன், பாவனி ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
Recommended Video
2017 ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2019 ம் ஆண்டு ஜுன் மாதம் வரை கிட்டதட்ட 404 எபிசோட்கள் ஒளிபரப்பான சீரியல் இது. இது ஹீரோவான சின்னதம்பி கேரக்டரில் பிரஜனும், ஹீரோயின் நந்தினி கேரக்டரில் பாவனி ரெட்டியும் நடித்திருந்தனர். தெலுங்கு, இந்தியில் பிரபலமாக இருந்தாலும் தமிழில் இந்த சீரியலில் நடித்த பிறகே தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்து, பிரபலமானார் பாவனி.

மீண்டும் வரும் சின்னதம்பி
இந்த சீரியல் தற்போது விஜய் டிவி.,யில் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. நவம்பர் 1 ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு சின்னதம்பி சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இரவு 9 மணிக்கு விஜய் டிவி.,யின் டாப் ரேட்டிங் சீரியலான பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

புதிய கண்ணம்மா யார்
பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் நடித்த ரோஷினி ஹரி பிரியன், சினிமா வாய்ப்பு கிடைத்ததால் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதில் வினுஷா தேவி, கண்ணம்மா ரோலில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் சிலர் தகவல்களின்படி, நட்சத்திரா கண்ணம்மா ரோலில் நடிக்க போவதாக கூறப்படுகிறது.

ரோஷினி தொடர போகிறாரா
உண்மையில் கண்ணம்மா ரோலில் இனி நடிக்க போவது யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. மற்றொரு தகவலின்படி, ரோஷினி ஹரிபிரியன் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகவில்லை. ரசிகர்களின் மனம் கவர்ந்த கண்ணம்மா ரோலில் அவரே தொடர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெண்பாவும் விலகுகிறாரா
ரோஷினி ஹரிபிரியன், அக்டோபர் 23 ம் தேதியுடன் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியதாகவும் மற்றொரு தகவல் கூறப்படுகிறது. வில்லியான வெண்பா கேரக்டரில் நடிக்கும் ஃபரீனா ஆசாத்தும் நிஜத்தில் கர்ப்பமாக இருப்பதால் பிரசவத்திற்காக விரைவில் அவரும் சீரியலில் இருந்து விலக போவதாக கூறப்படுகிறது.

பாரதி கண்ணம்மா நிறுத்தப்படுகிறதா
இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பாகி வரும் இரவு 9 மணிக்கு, இனி சின்னதம்பி சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் நவம்பர் 1 ம் தேதி முதல் பாரதி கண்ணம்மா சீரியல் நிறுத்தப்பட உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பாரதி கண்ணம்மா சீரியல் தற்காலிகமாக சிறிது காலம் நிறுத்தப்பட உள்ளதா அல்லது நேரம் மாற்றப்பட உள்ளதா என தெரியவில்லை.

பாவனியை ப்ரொமோட் செய்யவா
இதற்கிடையில், சின்னதம்பி சீரியல் மூலம் பிரபலமான பாவனி ரெட்டி, தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் பாவனியை ப்ரொமோட் செய்வதற்காக விஜய் டிவி, சின்னதம்பி சீரியலை மீண்டும் ஒளிபரப்புகிறதா என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் கிளப்பி உள்ளனர்.

மக்கள் ஓட்டுக்களை கவரவா
பிக்பாஸ் துவங்கப்பட்ட போது பாவனிக்கு ரசிகர்கள் அதிகம் இருந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக பாவனியின் செயல்பாடுகளால் அவருக்கு எதிராக சோஷியல் மீடியாக்களில் கமெண்ட்கள் அதிகம் பதிவாகி வருகிறது. ஒருவேளை மக்கள் பாவனிக்கு எதிராக அதிக ஓட்டுக்கள் பதிவிட நினைத்தால் அவர்களின் மனங்களை மாற்றி, ஆதரவு ஓட்டுக்களை அதிகரிக்க செய்வதற்காக சின்னதம்பி சீரியல் மீண்டும் ஒளிபரப்பப்படுகிறதா என்றும் ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர்.

கேள்விகளை அடுக்கும் நெட்டிசன்கள்
எதற்காக நன்றாக போய் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலை நிறுத்த வேண்டும் அல்லது அதன் நேரத்தை மாற்ற வேண்டும். பழைய சீரியல்கள் அனைத்தும் பகல் நேரங்களில் ஒளிபரப்பாகும் போது சின்னதம்பி சீரியலை மட்டும் ஏன் சரியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் ஒளிபரப்ப வேண்டும். பாரதி கண்ணம்மா சீரியல் நிறுத்தப்படுகிறது என்றால் அதற்கு ரோஷினி ஹரிபிரியன் விலகி மட்டும் தான் காரணமா என பல விதங்களில் சோஷியல் மீடியாக்கள் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











