அச்சச்சோ...என்ன சொல்றீங்க...குறைக்கப்படுகிறதா பிக்பாஸ் பெட்டியில் வைக்கப்பட்ட பணம்
சென்னை : பிக்பாசில் தற்போது பணப் பெட்டி டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.3 லட்சம் வைக்கப்பட்ட தகதகக்கும் பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார் சரத்குமார். போட்டியாளர்களுக்கு அட்வைஸ் கொடுத்து விட்டு, பணப் பெட்டியையும் வைத்து விட்டு வந்து விட்டார்.
இதனால் பணப்பெட்டியை யார் எடுப்பது என்ற பேச்சு நேற்றே போட்டியாளர்கள் இடையே துவங்கி விட்டது. இந்நிலையில் இன்று வெளியிடப்பட்ட ப்ரோமோக்களில் பண பெட்டியில் வைக்கப்பட்டுள்ள தொகை ரூ.7 லட்சம் வரை உயர்த்தப்பட்டதாக காட்டப்படுகிறது. இதில் தான் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.

மக்கள் நினைத்தது இதைத் தான்
இன்று வெளியிடப்பட்டுள்ள முதல் ப்ரோமோவில் பெட்டியில் உள்ள தொகை முதலில் 5 லட்சம் என்றும், பிறகு 7 லட்சம் என்றும் காட்டப்படுகிறது. இதைத் பார்த்து விட்டு தான் பாவனி 15 லட்சம் வைத்தால் யோசிப்பேன் என்கிறார். நிரூப் பரிசுத்தொகை 25 லட்சம் வரை உயர்த்தப்படலாம் என சொல்கிறார். இதனால் இரண்டாவது ப்ரோமோவில் பரிசுத் தொகை 10 லட்சமாக உயர்த்தப்படலாம். அப்போது யார் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

தொகை குறைக்கப்படுகிறதா
ஆனால் இரண்டாவது ப்ரோமோவில் தாமரையும், நிரூப்பும் பேசிக் கொள்கிறார்கள். அப்போது தாமரை, கோடி கணக்கில் வைத்தாலும் தான் எடுக்க மாட்டேன் என உறுதியாக சொல்கிறார். போட்டியாளர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே இடையிடையே பணப்பெட்டி சுற்றிக் கொண்டிருப்பதாக காட்டப்படுகிறது. அப்படி இரண்டாவது ப்ரோமோவில் காட்டும் போது பணப் பெட்டியில் உள்ள தொகை 6 லட்சம் என காட்டப்படுகிறது.

என்னப்பா குழப்புறீங்க
இதனால் பணப்பெட்டியில் வைக்கப்பட்ட தொகை உயர்த்தப்படும் என்று தானே சொன்னார்கள். இது என்ன குறைவதாக காட்டுகிறார்கள் என குழப்பமடைந்துள்ளனர். எதற்காக திடீரென உயர்த்தி விட்டு, பிறகு குறைக்கிறார்கள். ஏற்கனவே கடந்த சீசன்களுடன் ஒப்பிடுகையில் இந்த தொகை குறைவு என்று சொல்லப்படுகிறது என்கின்றனர்.

இவர் செய்த தவறா இது
ஒருவேளை முதலில் 5 லட்சம், பிறகு 6 லட்சம், அடுத்து 7 லட்சம் என உயர்த்தப்பட்டிருக்கலாம். ஆனால் முதல் ப்ரோவில் 7 லட்சம் வைக்கப்பட்ட க்ளிப்பிங்கை இணைத்த எடிட்டர், இரண்டாவது ப்ரோமோவில் தவறுதலாக 6 லட்சம் என்ற க்ளிப்பிங்கை சேர்த்து விட்டாரோ என்ற சந்தேகத்தையும் கிளப்பி சிலர் விஜய் டிவியை கலாய்த்து வருகிறார்கள்.
Recommended Video

கேள்வி கேட்கும் ரசிகர்கள்
இந்த முரண்பாடான ப்ரோமோக்களால் ரசிகர்கள் குழப்பமடைந்திருப்பதுடன், அப்படியானால் பணப்பெட்டியில் எவ்வளவு வரை தான் தொகை உயர்த்தப்படும் என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











