பிக்பாஸ் அல்டிமேட்... பெண் போட்டியாளர்களை மொத்தமாக வெளியேற்ற போகிறார்களா?
சென்னை : பிக்பாஸ் அல்மேட் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக வெளியேற்ற பிக்பாஸ் பிளான் போடுவதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எப்போதும் இல்லாமல் பிக்பாஸ் ஏன் இப்படி ஒரு பாகுபாடு காட்டி வருகிறார்கள் எனவும் கேட்டு வருகின்றனர்.
பிக்பாஸ் அல்டிமேட் 14 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டது. இவர்களில் 7 பேர் ஆண் போட்டியாளர்கள். 7 பேர் பெண் போட்டியாளர்கள். இதில் இதுவரை வனிதா விஜயக்குமார் மற்றும் சுஜா வருணி ஆகியோர் வெளியேறி உள்ளனர். ஆண்களில் சுரேஷ் சக்கரவர்த்தி, ஷாரிக், அபினய் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இவர்களில் சுரேஷ் சக்கரவர்த்தி வைல்ட்கார்டு என்ட்ரியாக மீண்டும் உள்ளே அனுப்பப்பட்டுள்ளார்.

சிம்புவிற்காக நோ எவிக்ஷன்
கமலுக்கு பதில் புதிய ஹோஸ்டாக நேற்று முதல் சிம்பு வந்துள்ளார். சிம்பு வந்ததை முன்னிட்டு கலக்க போவது யாரு சதீஷ் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி வைல்ட்கார்டு என்ட்ரியாக உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர். அதே சமயம் நோ எவிக்ஷன் என சொல்லி விட்டார் சிம்பு. ஆனால் அடுத்த வாரம் டபுள் எவிக்ஷன் உண்டு என்பதை இப்போதே சொல்லி விட்டார் சிம்பு. இந்த வாரமே டபுள் எவிக்ஷன் நடத்தப்பட இருந்ததாகவும், தான் பேசி அதை ஒன்றாக்கியதாகவும், பிறகு பிக்பாசாக நோ எவிக்ஷன் என சொன்னதாகவும் சிம்புவே நேற்று கூறினார்.

மொத்தமாக நாமினேட் ஆன பெண்கள்
இந்நிலையில் இன்று இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். தாடி பாலாஜி, சுருதி, அனிதா, அபிராமி, ஜுலி, தாமரை, சினேகன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வீட்டில் தற்போதுள்ள ஐந்து பெண் போட்டியாளர்களின் பெயர்களும் நாமினேஷனில் இருப்பது தான். இது பாலா, நிரூப் போன்ற நாமினேஷனில் இல்லாதவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பெண்களை வெளியேற்ற பிளானா
போட்டியாளர்களை மட்டுமல்ல நெட்டிசன்களையும் கடுப்பாக்கி, அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பெண் போட்டியாளர்களை மொத்தமாக வெளியேற்ற பிக்பாஸ் பிளான் போடுகிறாரா என அனைவரும் கேட்க துவங்கி விட்டனர். அதெப்படி ஒருவர் கூட பாக்கி இல்லாமல் மொத்தமாக 5 பெண்களையும் நாமினேட் செய்வார்கள். வைல்ட்கார்டு என்ட்ரியாக ஏன் ஒரு பெண் போட்டியாளரை கூட அழைக்கவில்லை. பிக்பாஸ் போட்டியாளர் அல்லாத சதீஷை எதற்காக வைல்ட்கார்டு என்ட்ரியாக அனுப்பினார்கள் என பல விதங்களில் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இரண்டு பெண்கள் வெளியே போகிறார்களா
இந்த வாரம் 5 பெண் போட்டியாளர்களும் நாமினேஷில் இருக்கிறார்கள் என்பதால், வரும் வாரத்தில் டபுள் எவிக்ஷனில் இரண்டு பெண்கள் வெளியேற்றப்பட உள்ளனரா. பாலாஜி, சினேகன் போன்றோர் தாங்களே வீட்டிற்கு செல்ல வேண்டும் என கேட்டார்கள். ஆனால் அவர்களை தொடர்ந்து போட்டியில் இருக்க வைக்கிறார்கள். ஆனால் பெண் போட்டியாளர்களை வேண்டுமென்றே குறிவைத்து அனுப்ப பார்க்கிறார்கள் என பலர் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











