கட்டம் கட்டி தூக்கப்படுகிறார்களா பெண் போட்டியாளர்கள்...பிக்பாசை வறுத்தெடுக்கு நெட்டிசன்கள்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 அக்டோபர் 3 ம் தேதி துவங்கப்பட்டது. மாடலிங், நடிப்பு, கானா பாடகர், ராப் பாடகர், நாட்டுப்புற கலைஞர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 18 பேர் போட்டியாளர்களாக அழைத்து வரப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அதிகம் அறிமுகம் இல்லாத நபர்கள்.

இதனால் இந்த சீசன் சுவாரஸ்யமாக இருக்காது. போர் அடிக்கும் என போட்டியாளர்கள் பட்டியல் வெளியானதுமே ஏராளமானவர்கள் கருத்து கூற துவங்கி விட்டனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் அதிகரிக்க துவங்கியது. ப்ரோமோக்கள் எப்போது வரும் என பலர் காத்திருக்க துவங்கி விட்டனர். அந்த அளவிற்கு பிக்பாஸ் ரசிகர்களை ஈர்க்க துவங்கி விட்டது.

அதிகமான பெண் போட்டியாளர்கள்

அதிகமான பெண் போட்டியாளர்கள்

18 போட்டியாளர்களில் அதிகமானவர்கள் பெண்கள் தான். பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஏழு வாரங்களை கடந்து விட்டது. எட்டாவது வாரம் தற்போது துவங்கி உள்ளது. முதல் வாரம் எலிமினேஷன் கிடையாது. இருந்தாலும் தவிர்க்க முடியாத மருத்துவ காரணங்களால் திருநங்கையும் மாடலுமான நமிதா மாரிமுத்து தானாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

நாமினேஷனில் வெளியேறியவர்கள்

நாமினேஷனில் வெளியேறியவர்கள்

இவரை தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் நாமினேஷன் மூலம் 6 பேர் வெளியேற்றப்பட்டனர். நாடியா சாங், சின்ன பொண்ணு, அபிஷேக் ராஜா, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் அபிஷேக் ராஜா தவிர மற்ற அனைவரும் பெண்கள்.

வெளியேற்றப்பட்ட அபிஷேக்

வெளியேற்றப்பட்ட அபிஷேக்

ஓவராக இன்ஃபுலியன்ஸ் செய்கிறார், கேம் சுவாரஸ்யத்தை கெடுக்கிறார் என்பது உள்ளிட்ட பல காரணங்களை சொல்லி அபிஷேக் ஹவுஸ்மேட்களால் நாமினேட் செய்யப்பட்டார். கிட்டதட்ட இதே காரணங்களை சொல்லி மக்களும் அபிஷேக் ராஜாவிற்கு குறைவான ஓட்டுக்கள் அளித்து அவரை வெளியேற்றியதாக சொல்லப்பட்டது.

மீண்டும் வந்தது ஏன்

மீண்டும் வந்தது ஏன்

பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் வெளியிலும் அதிகம் வெறுப்பை பெற்றதாக சொல்லப்பட்ட அபிஷேக், 47 வது நாளில் வைல்ட்கார்ட் என்ட்ரியாக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். இதை வைத்து விஜய் டிவி மற்றும் பிக்பாசை நெட்டிசன்கள் பலவிதங்களில் கேள்வி கேட்டு வந்தனர். அப்படியானால் மக்கள் அளித்த ஓட்டு என்னவாயிற்று என கேட்க துவங்கினர்.

அடுத்த பெண் போட்டியாளர்

அடுத்த பெண் போட்டியாளர்


இதுவரை வெளியேற்றப்பட்டவர்களில் ஒரே ஆண் போட்டியாளரான அபிஷேக் மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளார். அவரை தவிர பெண் போட்டியாளர்கள் வரிசையாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்த வாரம் வெளியேற போவதும் ஒரு பெண் போட்டியாளர் என்றே கூறப்படுகிறது.

இவர்களை வைத்திருப்பது ஏன்

இவர்களை வைத்திருப்பது ஏன்

அதுமட்டுமல்ல ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்பட்ட பெண் போட்டியாளர்கள், அந்த வாரத்தில் மிக மோசமாக செயல்பட்டதாக காட்டப்பட்டே அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதற்கு என்ன காரணம் என நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் அதே சமயம் கேமில் சுவாரஸ்யம் இல்லாமல் விளையாடுவதாக மக்கள் கூறும் சிபி, வருண், அபினய், ஐக்கி பெர்ரி, அக்ஷரா உள்ளிட்டோர் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகிறார்கள். இதுவும் ஏன் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குறிவைக்கப்படுகிறார்களா பெண் போட்டியாளர்கள்

குறிவைக்கப்படுகிறார்களா பெண் போட்டியாளர்கள்

பிக்பாஸ் குழுவினர் ஒவ்வொரு வாரமும் பெண் போட்டியாளர்களை குறிவைத்தே நாமினேஷன் நடத்தி, ஒவ்வொருவரையாக வெளியேற்றி வருவதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இல்லை பெண் போட்டியாளர்கள் அதிகம் என்பதால் முதலில் அவர்கள் வடிகட்டி அனுப்பப்படுகிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X