ஸ்கெட்ச் தனலட்சுமிக்கு இல்லை போல.. ஜிபி முத்துவுக்கா? இப்பவே காய்ச்சல்னு படுக்க வச்சிட்டாங்க!

சென்னை: பிக் பாஸ் சீசன் 6 தொடங்கியதில் இருந்தே கடந்த ஒரு வாரமாகவே இது ஜிபி முத்துவின் சிங்கிள் மேன் ஷோவாக மாறிவிட்டது என பல தரப்பில் இருந்தும் புகார்கள் கிளம்பின.

ஜிபி முத்துவை எதிர்த்து பேசி விட்டார் என்கிற ஒரே காரணத்திற்காக தனலட்சுமியை வீட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் என ஜிபி முத்து ஆர்மி பொங்கினர்.

ஆனால், ஓவியாவையே வெளியே அனுப்பி விட்டு கேம் விளையாடிய பிக் பாஸ் டீம் ஜிபி முத்துவை வெளியே அனுப்ப பிளான் செய்து விட்டதா? என்கிற பயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் தொற்றியுள்ளது.

கடுப்பான கமல்

கடுப்பான கமல்

பாதாமை கொடுத்தாவது ஆதாம் பற்றி ஜிபி முத்துவுக்கு புரிய வைத்து விடலாம் என கமல் நினைத்தும் பலனளிக்காத நிலையில், சோஷியல் மீடியாவில் கமலை பங்கமாக கலாய்த்து ஜிபி முத்துவுக்கு தக் லைஃப் எல்லாம் போட்டு அவரது ஆர்மியினர் ஆண்டவரை ரொம்பவே கடுப்பாக்கி விட்டனர். எங்கடா ஜிபி முத்துவை வாரி விடலாம் என நினைத்துக் காத்துக் கொண்டிருந்த கமல் மனிதாபிமானம் என்கிற வார்த்தையை அவர் உச்சரிக்கும் முறையை வைத்து கிண்டல் அடித்து ஸ்கோர் செய்தார் என குற்றச்சாட்டுக்கள் கிளம்பின.

மைனா வரும்போது

மைனா வரும்போது

முருங்கைக்காய், ரசிகர்களின் லெட்டர் எல்லாம் பார்த்து சந்தோஷமாக இருந்த ஜிபி முத்து மைனா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த உடனே நேராக படுக்கையில் சென்று படுத்துக் கொண்டது ஏன்? என்கிற கேள்வியும் ஏதாவது டிராமாவை பிக் பாஸ் டீம் ஆரம்பித்து விட்டதா? என்கிற கேள்விகளையும் கிளப்பி வருகின்றனர்.

ஜிபி முத்துவுக்கு காய்ச்சல்

ஜிபி முத்துவுக்கு காய்ச்சல்

நல்லா இருந்த மனுஷன் ஜிபி முத்துவுக்கு அதற்குள் அப்படி என்னதான் ஆச்சு என்றே தெரியவில்லை காய்ச்சல் என படுத்துக் கொண்டார். ரச்சிதா எல்லாம் அப்படி வந்து அக்கறை செலுத்துவது போல மிரட்டிச் செல்லும் தொனியை பார்த்தாலே ஏதோ நடக்கப் போகிறது என்பது போலத்தான் தெரியுது என ஜிபி முத்து ஆர்மி சந்தேக கண்ணை திறந்து வைத்து பார்த்து வருகின்றனர்.

ஸ்கெட்ச் தனலட்சுமிக்கு இல்லை

ஸ்கெட்ச் தனலட்சுமிக்கு இல்லை

தனலட்சுமிக்கும் ஜிபி முத்துவுக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனலட்சுமியை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், மிகப்பெரிய ஆர்மி இருந்த ஓவியாவையே வெளியேற்றி விட்டு கேம் ஆடினோம், கடந்த சீசனில் முதல் வாரத்திலேயே நமீதா மாரிமுத்துவை வெளியே அனுப்பினோம், இந்த முறை ஸ்கெட்ச் தனலட்சுமிக்கு இல்லை ஜிபி முத்துவுக்குத்தான் என்பது போல பிக் பாஸ் டீம் செயல்படுவதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கெட் வெல் சூன்

கெட் வெல் சூன்

ஜிபி முத்துவின் ஆர்மியினர் தலைவன் சீக்கிரம் குணமாகி தன்னுடைய ருத்ர தாண்டவ கேமை ஆடணும், அவரது உடம்புக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என நினைத்து கெட் வெல் சூன் தலைவா என பிரார்த்தனை செய்து வருகின்றனர். விஜய் டிவியும் பிக் பாஸ் குழுவும் இந்த முறை என்ன கேம் விளையாடப் போறாங்கன்னு வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X