தனுஷ் மகனும் ஹீரோவாக போகிறாரா? தி கிரேமேன் ப்ரீமியர் வரை அழைத்துச் செல்ல அதுதான் காரணமா?

சென்னை: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவு அறிவிப்பை வெளியிட்ட நிலையிலும், அப்பா தனுஷ் மீது எந்தவொரு கோபமும் இல்லாமல் மகன்கள் இருவரும் அவருடன் நெருக்கமாக பழகி வருகின்றனர்.

மேலும், தொடர்ந்து சினிமா விழாக்கள், அவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது என மகன்களுக்காகவும் தனது நேரத்தை நடிகர் தனுஷ் தாராளமாக ஒதுக்கி வருகிறார்.

சமீபத்தில் தி கிரேமேன் ப்ரீமியர் நிகழ்ச்சிக்காக தனது இரு மகன்களையும் தனுஷ் அழைத்துச் சென்ற நிலையில், கூடிய விரைவிலேயே அவரது மூத்த மகன் லிங்கா சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் என்கிற தகவல் காட்டுத்தீ போல சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது.

தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவு

தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவு

கடந்த 2004ம் ஆண்டு வெகு விமர்சையாக நடிகர் தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும் திருமணம் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்த பின்னர் அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தன. தனது நடிப்புத் திறமையால் அனைத்தையும் ஹிட்டாக்கி முன்னணி நடிகராக வலம் வருகிறார். ஆனால், இந்த ஆண்டு ஜனவரி மாதம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

இரு மகன்கள்

இரு மகன்கள்

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதியினருக்கு லிங்கா மற்றும் யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர். அப்பாவின் டி சர்ட் அணியும் அளவுக்கு வளர்ந்து விட்ட மகன்கள் இருக்கும் போது திடீரென இப்படியொரு முடிவை இவர்கள் எடுக்க என்ன காரணம் என ஏகப்பட்ட யூகங்கள் கிளம்பின. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குநராக மாறுவதற்கு தனுஷ் தடையாக இருந்தது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் உள்ளிட்ட பல கதைகள் வலம் வந்தன.

அப்பாவுடன் மகன்கள்

அப்பாவுடன் மகன்கள்

விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் மகன்கள் இருவருமே அப்பா தனுஷ் மீது கோபத்துடன் இருப்பார்கள், அவரை சந்திக்கவே மாட்டார்கள் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், லிங்கா மற்றும் யாத்ரா அப்பா தனுஷ் உடன் மிகவும் நெருக்கமாக உள்ளனர். விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் ஊட்டிக்கு சென்று நானே வருவேன் படப்பிடிப்பில் தனுஷை சந்திதது, இளையராஜாவின் இசைக்கச்சேரி நிகழ்ச்சியில் அப்பாவுடன் கலந்து கொண்டது, கிரிக்கெட் விளையாடியது என ஏகப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

போட்டிக்கு

போட்டிக்கு

அப்பா தனுஷ் உடன் மகன்கள் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டான அடுத்த சில நாட்களிலேயே அம்மா ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் மகன்கள் இருக்கும் புகைப்படங்களும் போட்டியாக வெளியாவது போல வெளிவந்து ரசிகர்களை ஒரேயடியாக குழப்பின. மேலும், இருவரும் ஒரே வீட்டுக்கு வந்து செல்வதாகவும், சீக்கிரமே சேர்ந்து வாழப் போவதாகவும் ஏகப்பட்ட கதைகளும் வலம் வந்தன.

தி கிரேமேன் ப்ரீமியரில்

தி கிரேமேன் ப்ரீமியரில்

இந்நிலையில், சமீபத்தில் ஹாலிவுட்டில் நடைபெற்ற தி கிரேமேன் ப்ரீமியர் விழாவுக்கு தனது மகன்களை விமானத்தில் அழைத்துச் சென்றார் நடிகர் தனுஷ். கோட் சூட் அணிந்து ஹாலிவுட் பிரபலங்கள் மத்தியில் லிங்கா மற்றும் யாத்ரா அப்பா தனுஷ் உடன் இருக்கும் செம கெத்தானபுகைப்படங்கள் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. ஒரு மகன் தனுஷ் போலவும், ஒரு மகன் ரஜினி போலவும் இருக்கிறார் என ரசிகர்கள் கொண்டாட தொடங்கி உள்ளனர்.

Recommended Video

Ram Pothineni Exclusive | |Dhanush ஐ தெலுங்கில் Launch செய்த பெருமை எங்களுக்கு இருக்கு | *Interview
அடுத்த வாரிசு

அடுத்த வாரிசு

தாத்தா ரஜினிகாந்த், அப்பா தனுஷ், பெரியப்பா செல்வராகவன், அம்மா ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என அனைவருமே சினிமாவில் அசத்திக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த வாரிசாக நடிகர் தனுஷின் மூத்த மகன் லிங்கா விரைவில் சினிமாவில் ஹீரோவாக போகிறார் என்கிற ஹாட்டான தகவல் காட்டுத்தீ போல பரவி வருகிறது. தனது மகனுக்காக இயக்குநர் வெற்றிமாறனிடமே ஒரு கதையை ரெடி பண்ண சொல்லி கேட்டு இருக்கிறாராம் தனுஷ். உலகின் சிறந்த படங்களின் லிஸ்ட்டை கொடுத்தும் மகனை பார்க்கச் சொல்லி இப்பவே அதற்கான பயிற்சிகளையும் வழங்கி வருகிறார் தனுஷ் என்கின்றனர். நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், உதயநிதி மகன் இன்பன் மற்றும் தனுஷின் மகன் லிங்கா எல்லாம் கோலிவுட்டில் அடுத்தடுத்து அறிமுகம் ஆனாலும், ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X