»   »  இந்தப் படமாவது நம்பிக்கை தருமா..? ஹிட் கிடைக்காமல் தவிக்கும் ஜீவா!

இந்தப் படமாவது நம்பிக்கை தருமா..? ஹிட் கிடைக்காமல் தவிக்கும் ஜீவா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
செல்ஃபி குல்ஃபி, கலகலப்பு 2 டிரைலர் விமர்சனம்- வீடியோ

சென்னை : சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், சிவா ஆகியோர் நடித்திருக்கும் 'கலகலப்பு 2' திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.

நல்ல வெற்றிப்படம் கிடைக்காமல் தொடர்ந்து தவித்து வரும் நடிகர் ஜீவாவுக்கு நாளை வெளியாகும் 'கலகலப்பு 2' படமாவது நம்பிக்கையைத் தருமா?

ஜீவாவின் 'கீ' திரைப்படம் அடுத்து வெளியாகவிருக்கும் நிலையில், 'கொரில்லா' படத்திலும், ராஜுமுருகன் இயக்கும் 'ஜிப்ஸி' படத்திலும் நடிக்கவிருக்கிறார் ஜீவா.

ஜீவா

ஜீவா

தமிழ் சினிமாவில் வாரிசுகளின் அறிமுகம் எந்தக் காலத்திற்கும் குறையவே குறையாது. தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களும், நடிகர்களும் வளர்ந்து நிற்கக் காரணமாக இருந்தவர் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி.

நடிகர் ஜீவா

நடிகர் ஜீவா

அவரது மகன் ஜீவா நடிகராக அறிமுகமாகி 15 வருடங்கள் ஆனாலும், இன்னமும் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடிக்காமல் இருக்கிறார். 2011-ம் ஆண்டு வெளிவந்த 'கோ' படம் அவருக்கு கமர்ஷியல் ஹீரோவாக பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தாலும் அதன் பின் தேர்வு செய்த படங்களில் கோட்டை விட்டார் ஜீவா.

தோல்விப் படம்

தோல்விப் படம்

கடந்த ஏழெட்டு வருடங்களாகவே வெற்றிக்கும் அவருக்கும் தூரம் அதிகமாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு அவர் நடித்து வெளிவந்த ஒரே படமான 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படம் கூட தோல்விப் படமாகத்தான் அமைந்தது.

கலகலப்பு 2

கலகலப்பு 2

இந்த ஆண்டில் அவருடைய முதல் வெளியீடாக நாளை 'கலகலப்பு 2' படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ஜீவாவை தவிர ஜெய், சிவா ஆகியோரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இந்தப் படமாவது வெற்றியாக அமைந்தால்தான், அடுத்தடுத்து ஜீவாவை வைத்து படங்களைத் தயாரிப்பவர்கள் தெம்பாக இருப்பார்கள்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

அடுத்து டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா நடிக்கும் 'கொரில்லா' படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார். அதன்பிறகு, ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜிப்ஸி' படத்தில் நடிக்கவிருக்கிறார் ஜீவா.

English summary
Jiiva, Jai and Siva starred 'Kalakalappu 2' will be released on tomorrow. Will Jiiva come out with a good hit? Next, Jiiva will be acted in 'Gorilla' and Raju Murugan's 'Gypsy'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil