Don't Miss!
- Lifestyle
குழந்தைகள் விரும்பி சாப்பிடும்... கேரட் சட்னி
- Sports
எங்க கிட்டயும் படைகள் இருக்கு..கேஜிஎப் வசனத்தை பேசிய பாட் கம்மின்ஸ்..இந்திய அணிக்கு பாராட்டு
- News
செந்தில் முருகனுக்கு அதிமுகவில் முக்கிய பதவி.. ‘கைம்மாறு’ செய்யும் ஓபிஎஸ்.. அப்போ கன்ஃபார்மா?
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
யாருக்கு அதிக ஓட்டு ? குறைந்த ஓட்டு யாருக்கு ?... ஹின்ட் கொடுத்து காப்பாற்றினாரா கமல் ?
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 ன் ஏழாவது வாரத்தின் நிறைவில் 9 பேர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் பாவ்னியை முதல் ஆளாக காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார் கமல். மீதமுள்ள 8 பேரில் வெளியேற போகிறவர் யார் என்பதை சஸ்பென்சாக வைத்து சென்றார் கமல்.
அடுத்த பிரம்மாண்டம்...குக் வித் கோமாளி 3 க்கு தயாராகும் விஜய் டிவி
49 வது நாளன்று நாமினேட் செய்யப்பட்ட 8 பேர் பற்றி, வெளியில் சென்று விட்டு வைல்ட்கார்டு என்ட்ரியாக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள அபிஷேக்கிடம் கேட்டார் கமல். அவரும் 8 பேர் பற்றி ஃபன்னாக சொல்லி முடித்தார். இதைத் தொடர்ந்து காப்பாற்ற பட போகிறவர்கள் யார் என்பதை அபிஷேக்கை வைத்தே சொன்னார் கமல்.

வித்தியாசமாக சேவ் செய்த கமல்
வழக்கமாக யாரிடமாவது இயல்பாக ஏதாவது கேள்வி கேட்டு, பேசிக் கொண்டிருக்கையில், திடீரென நீங்கள் காப்பாற்றப்பட்டு விட்டீர்கள் என சொல்வார் கமல். ஆனால் இந்த வாரம் சற்று வித்தியாசமாக அபிஷேக்கை வரிசையாக சொல்ல வைத்தே, அது சரியா, இல்லையா என்பதை மட்டும் சொன்னார் கமல். இது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அபிஷேக்கை வச்சு செய்த கமல்
யார் முதலில் காப்பாற்றப்படுவார் என அபிஷேக்கிடம் கேட்கிறார் கமல். அவர் தாமரை பெயரை சொல்கிறார். ஆனால் கமலோ, ப்பா...பின்னிட்டிங்க. உட்காருங்க. சிபி தான் முதலில் காப்பாற்றப்படுகிறார் என்றார். மீண்டும் அபிஷேக்கிடம் அடுத்து யார் காப்பாற்றப்படுவார் என கேட்கிறார். அவரும் நக்கலாக ஏற்கனவே பின்னி விட்டேன். இப்போது பூ வைக்காவிட்டால் நன்றாக இருக்காது என சொல்லி, அபினய் பெயரை சொல்கிறார். உங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுத்தா அதை டக்குன்னு புடிச்சுக்கிறீங்க என்று கரெக்ட் என்றார் கமல்.

அழிச்சாட்டியம் பண்ணும் தாமரை
அடுத்தது என கேட்கும் கமலிடம், நிரூப் என்கிறார் அபிஷேக். ஆனால் கமலோ, இல்லை. அக்ஷரா என்கிறார். அடுத்து என்கிறார் கமல். அதற்கு அபிஷேக், 90 சதவீதம் தமிழ் பெண்கள் தாமரை போல் அழிச்சாட்டியம் கலந்த பயங்கரவாத பவர் இருக்கு அவளிடம். அவளுக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளது. அதுவும் தொழிலாளர்களின் பிரதிநிதியாக விளையாடுவதால் அவளை காப்பாற்றி இருப்பார்கள் என்கிறார். உங்கள் எதிர்பார்பு தவறு என சொல்ல மாட்டேன். ஆனால் காப்பாற்றப்பட்ட வரிசையில் இமான் என்கிறார் கமல்.

தாமரையை கலாய்த்த கமல்
தொடர்ந்து, நீங்கள் சொன்னது சரியில்லை என சொல்ல முடியாது. தாமரையும் காப்பாற்றப்பட்டுள்ளார் என்கிறார் கமல். என்னை காப்பாற்றிய மக்களுக்கு நன்றி சொல்லிவிடுங்கள் சார் என கமலிடம் சொல்கிறார் தாமரை. வாரம் முழுவதும் பேசுவது நீங்கள். நன்றி சொல்லும் பொறுப்பை மட்டும் என்னிடம் கொடுக்கிறீர்களே. நீங்களே சொல்லுங்கள் என்கிறார் கமல்.

நிரூப் இல்லைன்னா உப்பில்லாத உப்புமா
ஐக்கி, நிரூப், இசைவாணி இவர்களில் அடுத்து காப்பாற்றப்பட போவது யார் என நினைக்கிறீர்கள் என கமல் கேட்க, அதற்கு பதிலளிக்கும் அபிஷேக், இது டாஸ்க் சார்ந்த விளையாட்டு என்பதால் அவன் இல்லாவிட்டால் டாஸ்க் பூர்த்தி ஆகாது. உப்பு இல்லாத உப்புமா மாதிரி இருக்கும். அதனால் நிரூப் என்கிறார். கரேக்ட் என தம்ஸ் அப் காட்டுகிறார் கமல்.

ஹின்ட் கொடுத்தாரா கமல்
கமல் இப்படி வரிசைப்படுத்தி சொன்னதன் மூலம் போட்டியாளர்களுக்கு ஏதாவது ஹின்ட் கொடுத்துள்ளாரா என பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். அதே சமயம் காப்பாற்றப்பட போகிறவர்கள் பற்றி அபிஷேக்கிடம் கேட்பதற்கு முன், இது எந்த வரிசையில் காப்பாற்றப்பட்டுள்ளார்கள் என தெரியாது என்றும் சொல்கிறார் கமல். ஆனால் போட்டியாளர்களுக்கு அவர் பெற்றுள்ள ஓட்டுக்களின் வரிசையை மறைமுகமாக கமல் கூறி உள்ளாரோ என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.