தளபதி 67 பட ஷூட்டிங்கிற்கு தனி ஹெலிகாப்டரில் சென்றாரா கமல்? டிரெண்டாகும் புகைப்படம்.. உண்மை என்ன?
சென்னை: தளபதி 67 படத்தின் ஷூட்டிங்கிற்காக ஒட்டுமொத்த படக்குழுவே ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் சென்ற நிலையில், கமல்ஹாசன் ஹெலிகாப்டரில் சென்றுள்ளாரா என வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
குழந்தையாக இருந்தது முதல் இதுவரை சினிமாவே மூச்சு என வாழ்ந்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன். ஏகப்பட்ட படங்கள், ஏகப்பட்ட முயற்சிகள், வெரைட்டியான நடிப்பு என ரசிகர்களை இத்தனை ஆண்டு காலமாக மகிழ்வித்து வருகிறார்.
ஸ்மார்ட் வாச்சில் படம் பார்க்க மக்கள் ரெடியாகி விட்டால் அதிலும், நடிக்க நான் ரெடி என்கிற மனநிலையில் இருக்கும் மகா நடிகர் கமல்ஹாசன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

தளபதி 67ல் கமல்?
தளபதி 67 படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில், காஷ்மீருக்குத்தான் கமல் ஹெலிகாப்டரில் தனியாக சென்று விட்டாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஹெலிகாப்டர் அருகே செம ஸ்மார்ட்டாக நின்றபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன். ஆனால், இந்தியன் 2 ஷூட்டிங்கிற்காகத்தான் கமல் ஹெலிகாப்டரில் சென்று வருவதாக கூறுகின்றனர்.

கடப்பாவில் இந்தியன் 2
திருப்பதியில் இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், தற்போது கடப்பாவில் இந்தியன் 2 ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. ஃபிளாஷ்பேக் போர்ஷன் காட்சிகள் அங்கே பிரம்மாண்டமாக செட் போட்டு படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பீரங்கி வண்டிகளுடன் ஆங்கிலேயர்கள் சண்டை போடுவதும், அவர்களை எதிர்த்து இளம் வயது சேனாபதி சண்டையிடும் காட்சிகள் அரங்கேறி வருவதாக கூறுகின்றனர்.

திருப்பதியில் கமல்
கடப்பாவில் சொகுசு விடுதிகள் இல்லாத நிலையில், கமல்ஹாசன் திருப்பதியில் தான் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் தினமும் திருப்பதியில் இருந்து கடப்பாவுக்கு ஹெலிகாப்டர் மூலம் ஷூட்டிங்கிற்கு வந்து செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அதை உறுதி செய்யும் விதமாக கமல் போட்டுள்ள போஸ்ட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

தனி ஹெலிகாப்டர்
திருப்பதியில் இருந்து கடப்பாவில் நடக்கும் இந்தியன் 2 ஷூட்டிங்கிற்காக நடிகர் கமல்ஹாசன் வந்து செல்லும் நிலையில், அவருக்கு என தனி ஹெலிகாப்டரை தயாரிப்பு நிறுவனம் ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், ஹெலிகாப்டர் அருகே படு மாஸாக நின்றபடி கமல் கொடுத்துள்ள சூப்பரான போஸ் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

அல்டிமேட் ஆரம்பிக்குமா
கடந்த ஆண்டு பிக் பாஸ் சீசன் 5 முடிந்த உடனே பிக் பாஸ் அல்டிமேட் என ஓடிடியில் 24 மணி நேரமும் முந்தைய பிக் பாஸ் பிரபலங்களை வைத்து பிக் பாஸ் அல்டிமேட் உடனடியாக ஆரம்பித்தது. ஆனால், இந்த ஆண்டு அதற்கு அதிகளவில் வாய்ப்பு இருப்பதாகவே தெரியவில்லை. சீசன் 6 நிகழ்ச்சியே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரம் ஒளிபரப்பான நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் சீசன் 2 இருக்காது என்றே பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

விக்ரம் 3 எப்போ
இந்தியன் 2 திரைப்படம் இறுதிகட்டத்தை எட்டி வரும் நிலையில், அடுத்து கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கப் போகிறாரா? எச். வினோத் இயக்கத்தில் நடிக்கப் போகிறாரா? அல்லது மலையாள இயக்குநர் படத்தில் நடிக்கப் போகிறாரா? என குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், விக்ரம் 3 படம் எப்போ உருவாகும் என்றும் ரசிகர்கள் இப்பவே எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











