ஓடிடி ரிலீஸ் தேதியே இன்னும் வெளியாகல? அதுக்குள்ள விக்ரம் படத்தோட ஹெச்.டி பிரின்ட் லீக் ஆகிடுச்சா?
சென்னை: கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் ஹெச்.டி. பிரிண்ட் லீக் ஆகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் சூர்யா நடிப்பில் கடந்த ஜூன் 3ம் தேதி விக்ரம் திரைப்படம் வெளியானது.
வெளியான அன்றே அதன் தியேட்டர் பிரின்ட் லீக்கான நிலையில், தற்போது ஹெச்.டி. பிரின்ட் வெளியாகி உள்ளதாக போட்டோக்களுடன் நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

400 கோடியை நோக்கி
கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3ம் தேதி வெளியான நிலையில், தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. இந்த வாரம் ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம் திரைப்படம் மட்டுமே வெளியாக உள்ளதால் விக்ரம் படம் இந்த வாரமும் கல்லா கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 360 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் ஈட்டியுள்ள விக்ரம் திரைப்படம் விரைவில் 400 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓடிடியில் எப்போ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், நரேன், காயத்ரி, ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, மகேஷ்வரி மற்றும் இவர்களுடன் இணைந்து கடைசியாக கிளைமேக்ஸில் ரோலக்ஸாக மிரட்டிய சூர்யா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள விக்ரம் படம் வரும் ஜூலை 1 அல்லது 8ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெச்.டி. பிரின்ட் லீக்கா?
வலிமை, கேஜிஎஃப், ஆர்.ஆர்.ஆர் என வரிசையாக படங்கள் ஓடிடியில் வெளியாவதற்கு முன்னதாகவே இணையத்தில் உள்ள பைரசி வெப்சைட்டுகளில் கசிந்து விடுகின்றன. இந்நிலையில், அதே போல விக்ரம் திரைப்படத்தின் ஹெச்.டி. பிரின்ட்டும் லீக்கானதா என்கிற கேள்வி சமூக வலைதளத்தில் கிளம்பி உள்ளது.

லிங்க் வேணுமா
விக்ரம் படத்தின் ஹெச்.டி. புகைப்படங்களை போட்டு நெட்டிசன் ஒருவர் லிங்க் வேண்டுமா? என ஹெச்.டிக்கு பதிலாக ஹெச்.பி என தப்பாக டைப் செய்து கேட்டுள்ளார். அதற்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் லிங்க் கொடுங்க என கெஞ்சி வருகின்றனர். சிலர், படத்தின் ஹெச்.டி. பிரின்ட் இன்னும் வரல, இப்போதைக்கு ஹெச்.டி போட்டோக்கள் தான் வெளியாகி இருக்கு என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

இளைஞர்கள் ஆர்வம்
ஓடிடியில் வெளியாகும் படங்களை சப்ஸ்கிரைப் செய்து அதிகாரப்பூர்வமாக பார்ப்பதை விட இப்படி டெலிகிராம் உள்ளிட்டவற்றில் கசியும் திருட்டு பிரின்ட்டுகளை டவுன்லோடு செய்து பார்ப்பதில் தான் இளைஞர்கள் அதிக் ஆர்வத்தை காட்டி வருகின்றனர். விக்ரம் படத்தின் ஹெச்.டி. பிரின்ட் இப்போ வரலைன்னாலும், சீக்கிரமே லீக் ஆகிடும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











