»   »  "த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா" இயக்குநர் "ஆதிக் ரவிச்சந்திரனை" தியேட்டரிலிருந்து துரத்திய பெண்கள்

"த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா" இயக்குநர் "ஆதிக் ரவிச்சந்திரனை" தியேட்டரிலிருந்து துரத்திய பெண்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா. இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து ஆனந்தி மற்றும் மனிஷா யாதவ் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் படம் எப்படி ஓடுகிறது என்பதைப் பார்க்க, சமீபத்தில் தியேட்டர்களுக்கு விசிட் அடித்திருக்கிறார்.


அப்போது படம் பார்க்க வந்த பெண்கள் இப்படி ஒரு படத்தைப் போய் எடுத்திருக்கிறாயே என்று இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனை திட்டி தியேட்டரை விட்டு துரத்தியதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.


ஆனால் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இதனை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.


த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா

கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா. இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து ஆனந்தி மற்றும் மனிஷா யாதவ் நடித்திருக்கின்றனர். அறிமுக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.


வெற்றிகரமாக

வெற்றிகரமாக

வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கக் கூடிய படமாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இதனால் குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று யாரும் இந்தப் படத்தை பார்க்கவில்லை. ஆனாலும் இளைஞர்களின் ஆதரவுடன் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா.
தியேட்டர் விசிட்

தியேட்டர் விசிட்

சமீபத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சென்னையில் உள்ள திரையரங்குகளுக்கு ஒரு விசிட் அடித்திருக்கிறார். அப்போது தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறாயே என்று ஆதிக் ரவிச்சந்திரனை திட்டியதாகவும், அதற்கு ஆதிக் ரவிச்சந்திரன் தெரிந்து தானே படம் பார்க்க வந்தீர்கள் என்று கேட்டதாகவும் கூறுகின்றனர்.


தியேட்டரை விட்டு துரத்திய பெண்கள்

தியேட்டரை விட்டு துரத்திய பெண்கள்

இதனால் கோபம் கொண்ட பெண்கள் ஆதிக் ரவிச்சந்திரனை தியேட்டரை விட்டுத் துரத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இதனை மறுத்திருக்கிறார்.


யார் இதுபோல செய்கிறார்கள்

யார் இதுபோல செய்கிறார்கள்

"யார் இதுபோன்ற தவறான் தகவல்களை பரப்புகிறார்கள் என்றே தெரியவில்லை. நான் சங்கம் மற்றும் அபிராமி தியேட்டர்களில் சென்று ரசிகர்களை சந்தித்தது உண்மைதான். ஆனால் நீங்கள் சொன்னது போன்ற எந்த விஷயங்களும் நடக்கவில்லை.


ரசிகைகள் வைத்த கோரிக்கை

ரசிகைகள் வைத்த கோரிக்கை

ரசிகைகள் என்னிடம் பேசியபோது அடுத்தமுறை நீங்கள் குடும்பம் மற்றும் நட்பை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். நானும் சரி என்று கூறி அவர்களிடம் இந்தப் படத்தை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி தெரிவித்தேன்". என்று கூறியிருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.


English summary
"I don’t know how such baseless rumors crop up. I did meet few ladies in theaters like Abirami and Sangam and they took it all sportingly. Of course, they requested me to make a more woman-friendly film next time. We shook hands and I thanked them for accepting the film with the right spirit." says Adhik Ravichandran.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil