»   »  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தன் வீட்டில் தங்க வைத்தாரா மம்முட்டி?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தன் வீட்டில் தங்க வைத்தாரா மம்முட்டி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களை வைத்து ஏகப்பட்ட தவறான தகவல்களும் பரவிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று நடிகர் மம்முட்டி சென்னையில் உள்ள தனது வீடுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தங்க அனுமதித்தார் என்பது.

மம்முட்டி தனது பேஸ்புக் பக்கத்தில், மழை வெள்ளத்தால் தங்க இடமின்றித் தவிக்கும் மக்கள் குறிப்பிட்ட எண்ணுக்கு போன் செய்து தகவல் தெரிவிக்கவும் என்று, ஒரு செல்போன் எண்ணைக் கொடுத்திருந்தார்.

Did Mammootty open his house for Chennai flood victims?

ஆனால் அதை நமது மக்கள் தவறாகப் புரிந்து கொண்டதோடு, தங்கள் இஷ்டத்துக்கு விளக்கமும் எழுதியிருந்தனர்.

"சென்னையில் எனக்கு மூன்று வீடுகள் உள்ளன. அவற்றில் தாராளமாக தங்கிக் கொள்ளுங்கள்" என்று மம்முட்டி சொன்னதாக செய்தி பரப்ப, அவர் வீடுகள் எங்கே உள்ளன என்று பலரும் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

உண்மையில் மம்முட்டி கூறியது, தங்க இடம் வேண்டுவோர் இந்த எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம் என ஒரு நண்பரின் எண்ணைக் கொடுத்திருந்தார்.

வீடுகளைத் திறந்துவிடுவதாக அவர் சொல்லவில்லையாம். இப்போது லண்டனில் ஒரு படப்பிடிப்பிலிருக்கிறார் மம்முட்டி.

English summary
There was a major misunderstanding following actor Mammootty’s Facebook post on providing shelter for Chennai flood victims.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil