Don't Miss!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- News
பிபிசி ஆவணப்படம் பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது.. வேல்முருகன் ஆவேசம்!
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
இப்படி சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே மணி சார்.. பொன்னியின் செல்வன் 2 ப்ரமோவை பந்தாடும் ஃபேன்ஸ்!
சென்னை: பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகப் போகிறது என்கிற அறிவிப்புடன் வெளியான புதிய ப்ரமோவை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் நடிப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது.
இந்நிலையில், அதன் இரண்டாம் பாகத்தின் முக்கிய ட்விஸ்ட் காட்சியையே தற்போது ப்ரமோவில் ரிவீல் செய்து சொதப்பிவிட்டார் இயக்குநர் மணிரத்னம் என நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
ராஜமெளலியின்
பாகுபலி
2
பார்முலாவை
கையில்
எடுத்த
மணிரத்னம்...
PS-2
ரிலீஸ்
தேதி
சீக்ரெட்
தெரியுமா?

முதல் பாக கிளைமேக்ஸ்
பொன்னியின்
செல்வன்
முதல்
பாகத்தின்
கிளைமேக்ஸ்
காட்சியில்
அருள்மொழி
வர்மன்
(ஜெயம்
ரவி)
மற்றும்
வந்தியத்தேவன்
(கார்த்தி)
இருவரும்
கடலில்
மூழ்கி
இறந்து
போனதாக
ட்விஸ்ட்
வைத்து
முடித்திருப்பார்கள்.
இந்நிலையில்,
பொன்னியின்
செல்வன்
2
படத்தின்
ரிலீஸ்
அறிவிப்புடன்
வெளியாகி
உள்ள
புதிய
ப்ரமோவை
பார்த்து
ரசிகர்கள்
பங்கமாக
கலாய்த்து
வருகின்றனர்.

ஜெயம் ரவியை காட்டிட்டீங்களே
பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்கிற ஒற்றைக் கேள்வியை மையமாக வைத்து பாகுபலி 2 படத்தை மிகப்பெரிய ஹிட் படமாக இயக்குநர் ராஜமெளலி மாற்றி இருந்தார். ஆனால், உங்களுக்கு பில்டப்பே கொடுக்க தெரியவில்லை. எடுத்ததுமே ஜெயம் ரவியை ஏன் காட்டினீர்கள் என ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

புக் படிச்சவங்களுக்கு கதை தெரியும்
பொன்னியின் செல்வன் புக் படிச்சவங்களுக்கு அருள்மொழி வர்மன் மரணிக்க மாட்டார் என்கிற கதை தெரியும். ஆனால், பொன்னியின் செல்வன் நாவலை படிக்காமல் முதல் முறையாக படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த கடைசி கிளைமேக்ஸை பார்த்து அதிர்ச்சியடைந்த நிலையில், இப்படி சல்லி சல்லியா ப்ரமோவிலேயே கார்த்தி மற்றும் ஜெயம் ரவியை காட்டிட்டீங்களே மணி சார் என ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

டைட்டில் ரோலே அவர் தான்
பொன்னியின் செல்வன் என்கிற டைட்டில் ரோலே ஜெயம் ரவி தான். அவர் எப்படி மரணிப்பார். அது கூட ஒரு ட்விஸ்ட் என ரசிகர்களுக்கு தெரியாதா? என்றும் ஏற்கனவே முதல் பாக டிரைலரிலேயே இரண்டாம் பாகத்தில் கடைசியாக மணிமுடி சூடும் காட்சி வரை இயக்குநர் மணிரத்னம் அப்பவே காட்டியிருப்பார் என மணிரத்னம் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகவும் சப்போர்ட் செய்து வருகின்றனர்.

1000 கோடி வசூல் வருமா
பொன்னியின் செல்வன் முதல் பாகமே 500 கோடி வசூலை அள்ளிக் கொடுத்த நிலையில், அதன் 2ம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தமிழ் சினிமாவில் முதல் முறையாக 1000 கோடி வசூலை எட்டிய படமாக பொன்னியின் செல்வன் மாறுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. பொன்னியின் செல்வன் 2 அல்லது இந்தியன் 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் தான் கோலிவுட்டுக்கு 1000 கோடி வசூலை அள்ளித் தரும் படமாக அமையும் என்றும் பலரும் ஆருடம் சொல்லி வருகின்றனர். கன்னட திரையுலகில் வெளியான கேஜிஎஃப் 2 முதல் பாகம் 250 கோடி வசூல் செய்த நிலையிலேயே அதன் 2ம் பாகம் 1200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.