Don't Miss!
- News
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
டைரக்டருடன் கோயிலில் மாலையும் கழுத்துமாக நின்ற மீரா மிதுன்...அதிர்ச்சியில் ரசிகர்கள்
சென்னை : சர்ச்சை நாயகி மீரா மிதுன், இயக்குநர் ஒருவருடன் சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் மாலை மாற்றி கொண்டதாக வெளியான போட்டோவால் கோலிவுட்டே பரபரத்து போய் உள்ளது.

அடுத்தடுத்து பல சர்ச்சைகளில் சிக்கி வரும் நடிகையும், மாடலுமான மீரா மிதுன் எது செய்தாலும், அதனை கழுவி ஊற்றுவதற்கு என்று சமூக வலைத்தளத்தில் ஒரு கூட்டம் உள்ளது. அதற்கு ஏற்றார் போல் தான் மீரா மிதுனும் அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.பிக்பாஸ் நிகழ்ச்சி முலம் பிரபலமான மீரா மிதுன், படங்களில் சிலவற்றில் நடித்து வருகிறார்.
இந்த சமயத்தில் தனக்கு வரும் பட வாய்ப்புகளை சூர்யா, விஜய் போன்ற வாரிசு நடிகர்கள் கெடுப்பதாக, வீடியோ வெளியிட்டு கதறியது மட்டும் இன்றி, பெரிய நடிகர் பலர் பற்றியும் பேசி வம்பில் மாட்டிக் கொண்டார். ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டு பின்னர் மன்னிப்பு கேட்டார். பின்னர் பட்டியலினத்தவர்கள் பற்றி அவதூறாக பேசியதால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் கொஞ்சம் அடங்கி போயுள்ள மீரா. அவ்வப்போது, ஆல்பம் சாங் எடுக்கிறேன் என்கிற பெயரில் கவர்ச்சி அட்ராசிட்டி செய்து வருகிறார்.மேலும் இவர், இயக்குநர் அன்பரசன் என்பவர் இயக்கி வரும் மிகவும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமான 'பேய காணோம்' என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஒரு பேய், மற்றொரு பேய காணவில்லை என்று புகார் கொடுக்கும் விதமாக இப்படம் உருவாகி உள்ளது. கவுசிக் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், மீரா மிதுன் தான் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் தருண் கோபி, கோதண்டம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கார்த்தி
படத்துல
நடிக்க
கிடைத்த
வில்லன்
சான்ஸ்..
நோ
சொன்ன
விஜய்
சேதுபதி..
என்ன
பிரச்சினை?
இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கூட, மீரா மிதுனுக்கும், காமெடி நடிகர் கோதண்டத்திற்கும்,இடையே பிரச்சனை வந்தது. அதே போல் படப்பிடிப்பு முடியும் முன்னரே இவர் இரவோடு இரவாக சென்று விட்டார் என படக்குழுவினர் குற்றம்சாட்டி இருந்தனர்.பிறகு மீரா மிதுனுக்கு பதிலாக டூப் போட்டு மீதமுள்ள படத்தை முடித்ததாக கூறப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க, தற்போது மீரா மிதுன் 'பேய காணும்' படத்தின் இயக்குநர் அன்பரசனுடன் நேற்று மாலை மாற்றிக்கொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக, இவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்து கொண்ட போட்டோக்கள் வெளியாகி உள்ளன.இது ஒரு புறம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தாலும், மற்றொரு புறம், படத்தின் ப்ரொமோஷனுக்காக தான் இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள் என கூறி வருகின்றனர்.