நயன்தாரா திருமணத்திற்கு ஒரு பைசா கூட செலவு இல்லையா...எப்படி பார்த்தாலும் லாபம் தான் போலவே

சென்னை : நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்து நான்கு நாட்கள் ஆகி விட்டாலும் அவர்களின் திருமணம் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகின்றன.

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் ஜுன் 9 ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் ரஜினி, விஜய், ஷாருக்கான், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி என திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட 200 பேர் வரை கலந்து கொண்டனர். பலத்த பாதுகாப்புடன், பல கட்டுப்பாடுகளுடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த கையோடு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வந்தனர். அங்கு செருப்பு அணிந்து சர்ச்சை, பிறகு மன்னிப்பு கடிதம் ஆகியவற்றை தொடர்ந்து சென்னையில் தாங்கள் முதல் முறையாக சந்தித்த தாஜ் கிளப் ஹவுசில் செய்தியாளர்களை சந்தித்து, ஜோடியாக நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து தங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

திருமணத்திற்கு காஸ்ட்லி கிஃப்ட்

திருமணத்திற்கு காஸ்ட்லி கிஃப்ட்

திருமணத்தன்று நயன்தாரா அணிந்து வந்த நகைகள் அனைத்தும் விக்னேஷ் சிவன் பரிசாக வழங்கியதாம். பல கோடி மதிப்பிலான இந்த நகைகள் வைரம், வைடூரியம், மரகத கற்களால் செய்யப்பட்டதாகும். அதிலும் நயன்தாரா அணிந்திருந்த மோதிரம் 5 கோடி, மூக்குத்தி 20 லட்சம் என்ற தகவல்கள் வெளியாகி அனைவரையும் வாயடைத்து போக வைத்தது. இதற்கு பதிலாக காதல் கணவர் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா, 20 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட பங்களாவை பரிசாக வழங்கி உள்ளார் என கூறப்பட்டது.

மொத்தம் எவ்வளவு செலவு செய்தார்கள்

மொத்தம் எவ்வளவு செலவு செய்தார்கள்

20 சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத, விருந்தினர்களுக்கு 27 வகையான விருந்து, ஒரு லட்சம் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு என தடபுடலாக திருமணத்தை நடத்தினார்கள். இவ்வளவு பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி இருக்கிறார்களே இதற்காக எத்தனை கோடிகளை செலவு செய்தார்கள் என்ற கேள்வியை பலரும் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். நயன்தாரா அணிந்த நகையில் மதிப்பே தலை சுற்ற வைக்கிறது என்றால், திருமணத்திற்காக அவர்கள் செலவு செய்த தொகையை கேட்டால் நிச்சயம் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியாது.

ரூம் வாடகையே இவ்வளவா

ரூம் வாடகையே இவ்வளவா

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் Sheraton Grand ரிசார்ட்டில் நடைபெற்றது. ரஜினி, விஜய், அஜித் போன்ற விஐபி.,க்கள் வருவார்கள் என்பதால் இந்த ரிசார்ட்டில் மொத்தம் 129 அறைகள் புக் செய்யப்பட்டதாம். இந்த ரிசார்ட்டில் ஒருநாளைக்கு குறைந்த பட்ச ரூம் வாடகையே ரூ.12,000 முதல் 17,000 வரை. மொத்தம் 3 நாட்களுக்கு அறைகள் புக் செய்யப்பட்டதாம். நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்திற்காக கடற்கரையை ஒட்டி கண்ணாடி மாளிகை போன்று பெரிய ஹால் அமைக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட 8 குழுக்களை சேர்ந்தவர்கள் அலங்காரம், வரவேற்பு, சாப்பாடு போன்றவற்றை கவனித்துக் கொண்டார்களாம்.

என்னது இத்தனை கோடி செலவா

என்னது இத்தனை கோடி செலவா

திருமணத்திற்காக மும்பையில் இருந்து 80 பவுன்சர்கள் பாதுகாப்பிற்காக அழைத்து வரப்பட்டுள்ளனர். நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண விருந்தில் ஒரு நபருக்கு தலா 3500 செலவு செய்துள்ளனர். இவர்களின் திருமணத்தை படப்பிடிக்க மட்டும் நெட்ஃபிளிக்ஸ் 2 கோடி வரை செலவு செய்துள்ளது. மொத்தமாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு 20 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மேலே சொன்ன செலவு கணக்குகளை கூட்டி கழித்து பார்த்தால் 20 கோடி என்பது மிகக் குறைந்த தொகை தானாம்.

ஒரு பைசா கூட செலவில்லாமல் லாபம்

ஒரு பைசா கூட செலவில்லாமல் லாபம்

இதுவரை வெளியான தகவலின்படி 20 கோடி செலவு என கூறப்பட்டாலும், திருமண செலவு என ஒரு பைசா கூட நயன்தாராவிற்கோ - விக்னேஷ் சிவனிற்கோ செலவு கிடையாதாம். மொத்த செலவையும் நெட்ஃபிளிக்ஸ் தான் செய்ததாம். திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமத்திற்காக நெட்ஃபிளிக்ஸ் 25 கோடி வழங்கி உள்ளது. இதனால் திருமணத்திற்கான மொத்த செலவான 20 கோடியையும் நெட்ஃபிளிக்ஸ் தான் கொடுத்துள்ளது. அதோடு 5 கோடி பணத்தையும் கையில் கொடுத்துள்ளது. எப்படி பார்த்தாலும் நயன் - விக்கிக்கு 5 கோடி லாபம் தான் கிடைத்துள்ளது. ஒரு பைசா செலவு இல்லாமல், அதுவும் 5 கோடி லாபத்துடன் ஒரு பிரம்மாண்ட கல்யாணத்தையே நடத்தி முடித்திருக்கிறார்களே என ஆச்சரியம் குறையாமல் கேட்டு வருகிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.

More from Filmibeat

Read more about: nayanthara vignesh shivan netflix
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X