For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அசல் கோலார்.. அசீம் ட்ரை பண்ணியும் மடங்காத குயின்ஸி.. இந்த போட்டியாளரை காதலிக்கிறாரா?

  |

  சென்னை: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இதுவரை காதல் டிராக்குகள் குறைவாக இருந்த நிலையில், இந்த சீசனில் எல்லாமே எல்லையை தாண்டி சென்றுக் கொண்டிருக்கின்றன.

  காதல எல்லாம் தாண்டிய நிலையிலும் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து கொஞ்சிக் கொள்வதையும், கடித்துக் கொள்வதையும் பார்க்க முடிகிறது.

  குயின்ஸியை ஆரம்பத்தில் இருந்தே அசல் கோலார் மற்றும் அசீம் கரெக்ட் செய்ய நினைத்து ரூட்டு விட்ட நிலையில், அவர்கள் இருவருக்கும் சிக்காத அவர், இன்னொரு போட்டியாளரிடம் நெருக்கம் காட்டி வருவது அம்பலமாகி உள்ளது.

  புருஷன வச்சிருக்கான்னு சண்டை போட்ட தான் பர்சனல்.. பிக் பாஸ் தனலட்சுமி கேம் குறித்து பேசிய வனிதா! புருஷன வச்சிருக்கான்னு சண்டை போட்ட தான் பர்சனல்.. பிக் பாஸ் தனலட்சுமி கேம் குறித்து பேசிய வனிதா!

  அடுத்த ஷிவானியின் நினைப்பு

  அடுத்த ஷிவானியின் நினைப்பு

  பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவானி போலவே தான் இருப்பதாக நினைத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் சுற்றி வருகிறார் குயின்ஸி என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். தலைவர் ஆனதும் அவர் போட்ட ஆட்டமெல்லாம் வேறலெவலில் இருந்ததாக போட்டியாளர்கள் பாதிக்கு பாதி பேர் சொல்லியும், கமல் 90 சதவீதம் மார்க் கொடுத்தார். வெளியே வந்ததும் ஒரு சின்ன ரோல் வெயிட்டிங் என்றும் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

  நீயும் நானும் ஜோடி சேர்ந்தா

  நீயும் நானும் ஜோடி சேர்ந்தா

  வந்ததும் வராததுமாக நடைபெற்ற டான்ஸ் போட்டியின் போதே அசீமுக்கு குயின்ஸி மீது ஒரு கண் இருந்தது. தனியாக அழைத்து உட்கார வைத்து, நீயும் நானும் க்யூட்டா ஆடினால், அந்த ஜோடி சூப்பராக இருக்கும் என ரசிகர்கள் பாராட்டுவார்கள். வெளியே போய் கூட நாம ரெண்டு பேரும் சினிமாவில் ஹீரோ ஹீரோயினா நடிக்கலாம் என்றெல்லாம் நூல் விட்டு பார்த்தும், வீட்டில் மகனை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் பேச்சு பேசுறாரு பார் என நினைத்த குயின்ஸி அவரிடம் சற்று தள்ளியே இருந்து வருகிறார்.

  சிக்கிய ஷெரினா

  சிக்கிய ஷெரினா

  குயின்ஸிக்கு பதிலாக அசீம் உடன் போட்டிப் போட்டு டான்ஸ் ஆடிய ஷெரினாவுக்கும் அசீமுக்கும் நல்ல வேவ் லெந்த் செட் ஆகி விட்டது. பொம்மை டாஸ்க்கிலும் நடந்தது என்ன என்பதை பார்க்காத நிலையிலும், கடைசி வரைக்கும் நான் பார்த்தேன் என அசீம் பொய் சொன்ன நிலையில் வாங்கிக் கட்டிக் கொண்டார். அதன் பின்னரும், ஷெரினாவுக்கு பின்னால் நின்று பாகுபலி பிரபாஸ் அம்பு விடுவதை போல எல்லாம் நடித்து காட்டிய காதல் நாடகங்கள் ஒரு பக்கம் அரங்கேறி வருகின்றன.

  உரசி பார்த்த அசல்

  உரசி பார்த்த அசல்

  நல்லா பப்ளியாக இருக்கும் சின்னப் பொண்ணு குயின்ஸியிடம் தான் ஆரம்பத்தில் அசல் கோலார் தனது கோளாறுகளை காட்டத் தொடங்கினார். குயின்ஸியின் கைகளை உரசுவது, கடிப்பது, கால்களை அவர் மேல் போட்டு அமர்வது என ஏகப்பட்ட சில்மிஷங்களை செய்து வந்த அவர், குயின்ஸி செட் ஆகவில்லை என்பது தெரிந்ததும் நிவாஷினி பக்கம் திரும்பினார்.

  காதலிக்கும் குயின்ஸி

  காதலிக்கும் குயின்ஸி

  அசீம் மற்றும் அசல் கோலார் என இரு போட்டியாளர்களும் குயின்ஸியிடம் நூல் விட்டு பார்த்தும் சிக்காத அவர், நேற்றைய போட்டியில் ராம் ராமசாமியின் பொம்மையை வாங்கி கமல் முன்பாகவே ஏகப்பட்ட காதல் வசனங்களை பேசி தீர்த்தது ரசிகர்களை ரொம்பவே ஷாக்கில் ஆழ்த்தியது.

  ராம் ராமசாமி தான்

  ராம் ராமசாமி தான்

  உங்க ஷர்ட் கூட நல்லா இருந்துச்சு என குயின்ஸி சொன்னதும் ராம் அப்படியே இது தெரியாம நான் தனியாவே சுத்திட்டு இருக்கேனே என நினைத்துக் கொண்டார். பி.ஆர் புரமோஷனுக்கு 2 லட்சம் பணத்தை கொடுத்து விட்டு உள்ளே தூங்கி வழிந்து மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் ராம் ராமசாமி வரும் வாரங்களில் குயின்ஸியுடன் பிக் பாஸ் வீட்டில் டூயட் பாடப் போகிறார் என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

  English summary
  Queency loves Ram Ramasamy at Bigg Boss Tamil 6 house talks are going in social media after she told Ram's dress is so cute in front of Kamal Haasan at saturday episode. Before Azeem and Asal Kolaar tried to love Queency trolls also going in socials.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X