கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத லைகா.. ரஜினி தான் காரணமா? வெடித்த சர்ச்சை!
சென்னை: சாதாரண யூடியூப் சேனலில் இருந்து நேஷனல் மீடியா வரை நேற்று உலகநாயகன் கமல்ஹாசனின் 68வது பிறந்தநாளை கொண்டாடி தீர்த்த நிலையில், இந்தியன் 2 படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் மட்டும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து சொல்லாதது பெரிய பிரளயத்தையே கிளப்பி இருக்கிறது.
பாபி சிம்ஹா, ஆர்ஜே விஜய்க்கு எல்லாம் வாழ்த்து சொல்லும் லைகா நிறுவனம் கமல்ஹாசனை மட்டும் இப்படி அவமானப்படுத்தியதற்கு பின்னணியில் ரஜினிகாந்த் அல்லது உதயநிதி ஸ்டாலின் உள்ளார்களா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
கமல்ஹாசன் மீது லைகா நிறுவன தலைவர் சுபாஸ்கரன் கடும் கோபத்தில் இருந்த நிலையில் தான் பிறந்தநாள் வாழ்த்து போகவே கூடாது என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி விட்டார் என கூறுகின்றனர்.

கமல் பிறந்தநாள் கொண்டாட்டம்
கமல்ஹாசனின் 68வது பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று சீரும் சிறப்புமாக நடைபெற்றது. விக்ரம் படத்தின் 100வது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியும் சென்னையில் களைகட்டியது. விஜய் டிவியில் கமல் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கமல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை கமல் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் வாழ்த்து
கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தை இயக்கி வரும் இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் பிரத்யேக புதிய போஸ்டரை வெளியிட்டு இந்தியன் படக்குழு சார்பாக உலக நாயகனுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டு இருந்தார். ஆனால், தயாரிப்பு நிறுவனமான லைகா கமல்ஹாசனை கண்டுக்கவே இல்லாதது பெரிய பஞ்சாயத்தை கிளப்பி இருக்கிறது.

கண்டுக்காத லைகா
நவம்பர் 6ம் தேதி பாபி சிம்ஹா பிறந்தநாளுக்கு வாழ்த்து, நவம்பர் 8ம் தேதி ஆர்ஜே விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல முடிந்த லைகா நிறுவனத்தால் நவம்பர் 7ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல முடியவில்லையே ஏன்? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர். அதுவும் லைகா தயாரிப்பில் இந்தியன் 2 படத்தில் கமல் நடித்து வரும் நிலையில் தங்களுக்கு அடுத்து 1000 கோடி வசூலை ஈட்டித் தரப் போகும் நாயகனுக்கு ஒரு வாழ்த்து கூட சொல்ல முடியாத அளவுக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரஜினி காரணமா
லைகாவுடன் அடுத்த இரண்டு படங்களில் கமிட் ஆகி உள்ள ரஜினிகாந்த் தான் இந்த பிரச்சனைக்கு காரணமா? என்றும் கமல் ரசிகர்கள் ட்வீட் போட்டு வருகின்றனர். பதிலுக்கு, கமல்ஹாசனை லைகா கொஞ்சம் கூட மதிக்கவில்லையே என ரஜினி ரசிகர்கள் கமலை சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

கமலுக்கு பதில் ரஜினி
பொன்னியின் செல்வன் 500 கோடி வசூல் ஈட்டிய நிலையில், நடந்த பார்ட்டியில் லைகா நிறுவனம் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்காமல் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்தது தான் காரணம் என்கின்றனர். இல்லை அழைப்பு விடுத்து கமல் போகாதது தான் காரணமா? என்றும் யூகங்கள் கிளம்பி உள்ளன. பொன்னியின் செல்வன் அறிமுக வசனத்தையே கமல் தான் பேசியிருப்பார். பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் நடந்த சம்பவங்கள் காரணமா? என பலரும் குழம்பிப் போயுள்ளனர்.

உதயநிதி பண்ண வேலை
இந்தியன் 2 படத்தையே மீண்டும் தொடங்க காரணமே உதயநிதி ஸ்டாலின் தான். மேலும், மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள 234வது படத்தையும் உதயநிதி ஸ்டாலின் தான் தயாரிக்கிறார். அதன் காரணமாகத்தான் லைகா சுபாஸ்கரனுக்கு கமல் மீது கோபம் ஏற்பட்டுள்ளது என்றும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

இந்தியன் 2 என்ன ஆகும்
மீண்டும் தயாரிப்பு தரப்புக்கும் கமலுக்கும் முட்டிக் கொண்ட நிலையில், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புக்கு கமல் சரியாக வருவாரா? திட்டமிட்டபடி படம் விரைவில் வெளியாகுமா? அல்லது மீண்டும் கிடப்பில் போடப்படுமா? என்கிற கேள்விகளும் எழுந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன. எவ்வளவு தான் பிரச்சனை இருந்தாலும், தமிழ் சினிமாவின் பொக்கிஷமான கமலை லைகா இப்படி பகைத்துக் கொள்ளக் கூடாது என ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











