மகேஸ்வரியின் மானத்தை வாங்கிய மாஸ்டர்.. தொடை தெரியுதுன்னு டவுசர் போட்டு சுத்துறவங்க சொல்லலாமா?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர் மகேஸ்வரியிடம் நடந்து கொண்ட விதத்தை ரசிகர்கள் பலரும் கண்டித்து வருகின்றனர்.
சோபாவில் அமர்ந்திருந்த மகேஸ்வரியை ராபர்ட் மாஸ்டர் எழுப்பி அப்படியொரு வார்த்தை சொன்னது மகேஸ்வரியை மட்டும் அல்ல நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த பலரையும் பதற வைத்துள்ளது.
4வது சீசனில் எல்லாம் அர்ச்சனா ஆண் போட்டியாளர்களுடன் இருப்பது எந்தவொரு அச்சத்தையும் தரவில்லை என சொல்லி பாராட்டியது ஏன் என இப்போது தான் புரிகிறது என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

அச்சம் தரும் பார்வை
பெண் போட்டியாளர்களும், ஆண் போட்டியாளர்களும் சம அளவில் இருக்கும் ஒரு வீட்டில், ஏற்கனவே கேமரா கண்கள் சூழ்ந்திருக்க பெண்களும் அதிக கவனமாகவே செயல்பட்டு வருகின்றனர். ஆனால், அதையும் மீறி சக போட்டியாளர்களே ஒரு மாதிரி பார்க்கின்றனர் என்கிற அச்ச உணர்வு வந்து விட்டால், அவர்களால் தொடர்ந்து கேமை தொடர முடியுமா? என்பது சந்தேகம் தான் என நேற்று நடந்த நிகழ்வு குறித்து ஒரு விவாதமே சோஷியல் மீடியாவில் ஓடிக் கொண்டிருக்கிறது.

மகேஸ்வரியிடம் அப்படி பேசலாமா
சோபாவில் கவுன் அணிந்து கொண்டு அமர்ந்திருந்த மகேஸ்வரியை அங்கே வந்த ராபர்ட் மாஸ்டர், ஒரு நிமிஷம் எழுந்து நில்லு என்றார். என்ன சொல்லப் போறாரோ என தெரியாமல் எழுந்து நின்றதும், இப்போ இறங்கிடுச்சு என பச்சையாக பேசியதை பிக் பாஸ் ரசிகர்கள் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.

தொடை தெரியுது
யாருடா அது தொடையை காட்டிட்டு உட்கார்ந்து இருக்கிறதுன்னு பார்த்தேன். அதான் வந்து எந்திரிக்க சொன்னேன் என ராபர்ட் மாஸ்டர் பேசியதும், என்னை தொடை தெரியுதான்னு மகேஸ்வரி கோபமே பட்டார். ஆனால், மாஸ்டர் வயதில் மூத்தவர் என்பதால் பெரிய அளவில் சண்டை போடவில்லை.

டவுசர் பாண்டிகள்
பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட ஆண் போட்டியாளர்கள் வெறும் டவுசரை அணிந்து கொண்டு வலம் வருகின்றனர். மகேஸ்வரியின் தொடை தெரியுதுன்னு பேசிய ராபர்ட் மாஸ்டரே பேன்ட் அணியாமல் டவுசர் தான் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர் எப்படி அப்படி பேசலாம் என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

கேமராவில் தெரியக் கூடாதுன்னு
ராபர்ட் மாஸ்டர் கேமராவில் ஆபாசமாக தெரிந்து விடக் கூடாது என்பதற்காக எச்சரிக்கை செய்யவே மகேஸ்வரியிடம் அப்படி நடந்து கொண்டார் என்றும் அதனால் தான் மகேஸ்வரி அவரிடம் சண்டை பிடிக்கவில்லை என்றும் ராபர்ட் மாஸ்டர் ரசிகர்களும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். என்ன இருந்தாலும், ராபர்ட் மாஸ்டர் அப்படி பேசியிருக்கக் கூடாது என்றே பலரும் கண்டித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











