»   »  சச்சின் படத்திற்கு டெண்டுல்கர் ரூ. 40 கோடி கேட்டாரா?: உண்மை என்ன?

சச்சின் படத்திற்கு டெண்டுல்கர் ரூ. 40 கோடி கேட்டாரா?: உண்மை என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்க்கை வரலாற்று படத்திற்காக ரூ. 35 முதல் ரூ. 40 கோடி வாங்கியதாக ஒரு வதந்தி பரவியது.

கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் என்ற பெயரில் படமாக்கப்பட்டு ரிலீஸாகியுள்ளது.


படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


சச்சின்

சச்சின்

சச்சின் தனது வாழ்க்கை வரலாற்று படத்திற்காக ரூ. 35 கோடி முதல் ரூ. 40 கோடி சம்பளம் வாங்கியதாக வதந்தி பரவியது. இதை படத்தின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்.
தப்பு

தப்பு

சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் படத்திற்காக டெண்டுல்கர் ரூ. 40 கோடி வாங்கியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. சச்சின் இந்த படத்திற்கு முழு ஆதரவு அளித்துள்ளார் என்று படத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


பாகுபலி 2

பாகுபலி 2

பாகுபலி 2 படம் இன்னும் பாக்ஸ் ஆபீஸை ஆட்சி செய்யும் நிலையிலும் சச்சின் படத்தின் வசூல் பாதிக்கப்படவில்லை. சச்சினை திரையில் பார்க்கவே ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.


 வசூல்

வசூல்

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் படம் வார இறுதி நாட்களில் ரூ. 27.85 கோடி வசூல் செய்துள்ளது. சச்சின் என்ற ஒரேயொரு பெயருக்காக படம் ஓடிக் கொண்டிருக்கிறது.


English summary
A rumour is doing rounds that Sachin Tendulkar charged Rs. 35 crore - Rs. 40 crore for his biopic Sachin: A Billion Dreams.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil