Don't Miss!
- News
பக்காமூவ்.. மோடி, அமித்ஷாவின் நம்பிக்கை.. கர்நாடகா பொறுப்பாளராக தர்மேந்திர பிரதான்..காரணமே இதுதான்
- Lifestyle
வார ராசிபலன் 05 February to 11 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமா இல்லன்னா பணஇழப்பு ஏற்படும்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Bigg Boss Tamil 6: இந்த வாரம் தனா தான் எவிக்ட்டா? அதுக்குத்தான் இப்படியொரு ப்ரமோவா?
சென்னை: காலேஜ் டாஸ்க்கில் எதுக்கு தேவையில்லாமல் ரேங்கிக் டாஸ்க் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தாலும், கிடைத்த கேப்பில் சிக்ஸர் அடித்துள்ளார் அசீம். பிக் பாஸ் வீட்டில் பலரும் இன்னமும் முகமூடி போட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர் என அவர் போட்டு உடைத்துள்ள ப்ரமோ 3 தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி அப்படியே 74 நாட்களை கடந்து தள்ளுங்க பாஸ் தள்ளுங்க என இந்த சீசனை கடத்திக் கொண்டு இருக்கிறது.
இந்த வாரம் கமல்ஹாசன் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் கலந்து கொள்ள உள்ள நிலையில், நாளையே பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஷூட்டிங் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
போதும்
முடியல
..அழுதுடுவேன்..பிக்
பாஸ்
ப்ரோமோவை
பார்த்து
கடுப்பான
நெட்டிசன்ஸ்!

நாளையே லீக் ஆகிடும்
வழக்கம் போல சனிக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடைபெறாமல் இந்த வாரம் வெள்ளிக்கிழமையே ஷூட்டிங் நடைபெற உள்ளது. அதன் காரணமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக இந்த வாரம் வெளியே அனுப்பப்பட்ட போட்டியாளர் யார் என்பது நாளை மாலைக்குள் லீக் ஆகிவிடும். இந்த வாரமும் கடைசி நேரத்தில் எவிக்ஷன் ட்விஸ்ட் இருக்குமா என ரசிகர்கள் ரொம்பவே ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

மைனாவா தனாவா
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து மைனா தான் வெளியேறுவார் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதே சமயம் மைனாவுக்கும் தனலட்சுமிக்கும் நூல் அளவு தான் வித்தியாசம் இருக்கு. இவர்களை தாண்டி ரச்சிதா அல்லது ஷிவின் கடைசி நேர ட்விஸ்ட்டாக வெளியேற்றப்படுவார்களா? என்றும் கேள்விகள் கிளம்பி வருகின்றன.

3வது ப்ரமோ
இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள 3வது ப்ரமோவில் ஷிவின் மற்றும் தனாவை காப்பாற்ற விஜய் டிவி நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது என ப்ரமோவை பார்த்த நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். வெளியே போனால் சந்தோஷப்படுவீங்களா என தனாவை பார்த்து ஷிவின் கேட்பதை பார்த்த ரசிகர்கள் இந்த வாரம் தனா தான் எவிக்ட் ஆகப் போகிறார், அதற்கான சிக்னல் தான் இந்த ப்ரமோ என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

தனா தாறுமாறு
கடைசி வரைக்கும் நான் நானாக தான் இருந்தேன். அதனால் வெளியே போனாலும் நான் நல்லா தான் இருப்பேன். என்னை நினைத்து நிச்சயம் பெருமைப்படுவேன் என தனலட்சுமி வழக்கம் போலவே தாறுமாறாக பதில் அளித்துள்ளார். ஷிவின் தனாவை நோக்கி இப்படியொரு கேள்வி கேட்டதே இந்த வாரம் அவர் வெளியே போவார் என நினைத்தது தான் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

யாருமே உண்மையா இல்லை
ஏடிகேவின் கேள்விக்கு பதிலளித்த அசீம், இங்கே பலபேர் அவங்களாக இருப்பது போல நடித்து வருகின்றனர். யாருமே அவங்களா இல்லை என சொன்னதுமே பிக் பாஸ் எடிட்டர் விக்ரமனை ஏன் ஃபோகஸ் செய்கிறார் என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இன்னைக்கும் சண்டை இல்லையா
இந்த வாரம் வியாழக்கிழமையோடு பிக் பாஸ் நிகழ்ச்சி வார இறுதி ஷூட்டிங்கிற்கு செல்ல உள்ள நிலையில், இன்னைக்கு கூட பெரிய சண்டை போடவில்லையா? என ரசிகர்கள் இந்த வாரமும் வீக்கெண்ட் ஷோ ரொம்பவே டல் அடிக்கப் போகுதுன்னு ரசிகர்கள் புலம்பித் தீர்த்து வருகின்றனர்.