Don't Miss!
- News
"3 பஸ் அளவுக்கு பெருசு.." சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தாமல் இருப்பது ஏன் தெரியுமா! பரபர
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Finance
புதிய வருமான வரிக்கு பலே வரவேற்பு.. 66% பேர் மாறுவார்கள்.. சொல்வது யார் தெரியுமா..?
- Sports
"முன்பு கோலி.. இப்போ உம்ரான் மாலிக்" இந்திய வீரர்களை சீண்டும் சோஹைல் கான்.. இப்படியா சொல்லுவீங்க??
- Lifestyle
சுக்கிரன் உருவாக்கும் மாளவியா யோகம்: பிப்ரவரி 15 முதல் இந்த 5 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது..
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விஜய் சேதுபதியின் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிம்புவா ?
சென்னை : சிம்பு என்றாலே வம்பு என்ற காலம் போய், ஆளே அடியோடு மாறி விட்டார் சிம்பு. ஷுட்டிங் ஸ்பாட்டிற்கு தாமதமாக வருகிறார் என்பது போன்ற புகார்களையும் ஓவர்டேக் செய்து விட்டார் சிம்பு.
இரண்டு வருடங்களாக நடிக்காமல் இருந்த சிம்பு, தோற்றம், பழக்க வழக்கம் என ஆளே முற்றிலுமாக மாறி வந்தார் ஈஸ்வரன் படத்தில். சிம்புவின் இந்த மாற்றம் அவரை பற்றிய தவறான எண்ணங்களை மாற்றி, தயாரிப்பாளர்கள் மனங்களை வென்றுள்ளது.
ஆகஸ்ட்டில்
நதிகளில்
நீராடும்
சூரியன்
ஷுட்டிங்...
மீண்டும்
பிஸியான
சிம்பு
–
கவுதம்
மேனன்

மாநாட்டை முடித்த சிம்பு
சமீபத்தில் தான் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். பல காலமாக அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இருந்து வருகிறது மாநாடு. இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

அடுத்த படத்திற்கு தயார்
மாநாடு படத்தை முடித்த உடனேயே கவுதம் மேனன் இயக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் வேலைகளில் இறங்கி விட்டார் சிம்பு. ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் இந்த படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளது.

கொரோனா குமாரில் சிம்புவா
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, டைரக்டர் கோகுல் இயக்கும் காமெடி படமான கொரோனா குமார் படத்தில் சிம்பு நடிக்க போவதாக கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. இவர் இதற்கு முன் விஜய் சேதுபதி நடித்த சூப்பர் ஹிட் படமான இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கினார்.

விஜய் சேதுபதி படத்தில் 2 ம் பாகமா
இந்த படத்தில் சுமார் மூஞ்சி குமாரு என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இதனால் இந்த கேரக்டர் பெயரையே டைட்டிலாக வைத்து, கொரோனா குமார் படத்தை இயக்க போவதாக கூறப்படுகிறது. இந்த படம் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் அடுத்த பாகம் எனவும் கூறப்படுகிறது.

சந்தானம் ரொம்ப பிஸி
முதலில் இந்த படத்தில் நடிக்க சந்தானத்திடம் தான் பேசப்பட்டுள்ளது. ஆனால் அவர் மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால் இந்த படத்தில் சிம்புவை நடிக்க வைக்க போகிறார்களாம். இந்த படத்தில் நடிக்க சிம்பு உள்ளிட்ட மற்ற நடிகர்கள் ஓகே சொல்லி விட்டால் படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

முதல் முழுநீள காமெடி படம்
இந்த படத்திற்கு சிம்பு ஓகே சொல்லும் பட்சத்தில், அவர் நடிக்கும் முழு நீள காமெடி படம் இதுவாக தான் இருக்கும். அவரின் இந்த புதிய அவதாரம் அவரது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என கூறப்படுகிறது.