துணிவு படத்துக்கு சிவகார்த்திகேயன் ப்ரமோஷனா? லேட்டஸ்ட் போட்டோவால் வெடித்த சர்ச்சை.. பறக்கும் மீம்ஸ்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தனது சமூக வலைதள பக்கங்களில் அஜித்தை சமீபத்தில் சந்தித்து பேசினேன் ரொம்பவே பாசிட்டிவான வார்த்தைகளை சொன்னார் என அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார்.
அஜித் ரசிகர்களும், சிவகார்த்திகேயன் ரசிகர்களும் அந்த புகைப்படத்திற்கு லைக்குகளையும் ஹார்ட்டீன்களையும் வழங்கி வந்தனர்.
ஆனால், திடீரென இது லேட்டஸ்ட் போட்டோ இல்லை பழைய போட்டோ என ஆதாரங்களுடன் சில நெட்டிசன்கள் பதிவிட பெரும் சர்ச்சையாக மாறி விட்டது. மேலும், விஜய் பற்றிய செய்திகள் வந்து கொண்டு இருந்த நிலையில், அஜித் பற்றிய செய்தி வரவேண்டும் என்பதற்காகவே இந்த போட்டோவை சிவகார்த்திகேயன் வெளியிட்டார் என்றும் கூறுகின்றனர்.

அஜித்துடன் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் அஜித்தை சந்தித்தேன் என செம க்யூட்டான ஒரு போட்டோவை தனது சோஷியல் மீடியாவில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருமே செம அழகாக அந்த போட்டோவில் இடம்பெற்று இருந்தனர்.

திடீர் சந்திப்பு ஏன்
சிவகார்த்திகேயன் ஜெயிலர் படத்தில் நடித்து வருவதாகவும், அதே பகுதியில் அஜித்தின் துணிவு ஷூட்டிங் நடைபெற்று வருவதால் தான் இருவரும் சந்தித்துள்ளனர் என ரசிகர்கள் நினைத்து ட்வீட்களை தட்டிவிட்டனர். ஆனால், இந்த போட்டோவே இப்போது எடுத்தது இல்லை என்பது போல ஒரு ஆதாரத்துடன் வெளியான புகைப்படம் தான் இந்த சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பழைய போட்டோ
சிவகார்த்திகேயன் ஏதோ நேற்றோ, நேற்று முன் தினமோ நடிகர் அஜித்தை சந்தித்தது போல போட்டோ வெளியிட்ட நிலையில், அக்டோபர் மாதம் அஜித்துடன் அதே இடத்தில் அதே உடையில், அதே லைட் ஒளி படற எடுத்த போட்டோவை ஒரு ரசிகர் வெளியிட ஒரு மாசத்துக்கு முன்பு எடுத்த போட்டோவை திடீரென சிவகார்த்திகேயன் இப்போ ஷேர் செய்வது ஏன் என்கிற கேள்வியை விஜய் ரசிகர்கள் கிளப்பி உள்ளனர்.

துணிவு ப்ரமோஷன்
துணிவு படத்துக்கு நேரடியாக ப்ரமோஷன் செய்ய மாட்டேன் என சொல்லிவிட்டு நடிகர் அஜித் இப்படி மறைமுகமாக ப்ரமோஷன் செய்கிறாரே என்றும் சிவகார்த்திகேயன் இப்போ இந்த போட்டோவை வெளியிடக் காரணமே துணிவு படத்துக்கான ப்ரமோஷன் தான் என விஜய் ரசிகர்கள் ஏகப்பட்ட ட்ரோல்களையும் மீம்களையும் போட்டுத் தாக்கி வருகின்றனர்.

விஜய் வரவச்சாரு
பீஸ்ட் படப்பிடிப்பில் விஜய் உடன் எடுத்த போட்டோவை சிவகார்த்திகேயன் பீஸ்ட் படம் வெளியான பின்னர் தான் வெளியிட்டார். ஆனால், இப்போ துணிவு படத்துக்கு தனது ரசிகர்களை தயார்படுத்தும் நோக்கத்துடன் போன மாசம் எடுத்த போட்டோவை இப்போ போட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன் என போக்கிரி பட மீமை போட்டு விஜய் ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர்.

டிரெண்டாகும் மீம்ஸ்
நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து தற்போது அஜித் தரப்பு துணிவு படத்துக்கான ப்ரமோஷன் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது என்றும் சிவகார்த்திகேயன் அஜித் ரசிகர்கள் என்பதால் பாவப்பட்டு இப்படி மறைமுக ப்ரமோஷன் செய்து வருகிறார் என அஜித் ஹேட்டர்கள் ஏகப்பட்ட மீம்களை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் பிசியா இருந்திருப்பாரு
மாவீரன் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் பிசியாக இருந்திருப்பார். இப்போ ஃப்ரீயா இருக்கும் போது அந்த போட்டோவை ஷேர் செய்திருப்பார். அவரது ட்வீட்டில் இன்று நடிகர் அஜித்தை சந்தித்தேன் என எங்கேயும் அவர் குறிப்பிடவில்லை என அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











