ரஜினியை தொடர்ந்து சூர்யா.. தேசிய விருது கிடைத்தது இப்படித்தானா? வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: பார்த்திபன், ரஜினிகாந்தை தொடர்ந்து தேசிய விருது பெற்ற சூர்யா பக்கம் திரும்பி இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.
Recommended Video
நடிகர் சூர்யாவுக்கும் அவர் தயாரித்து நடித்த சூரரைப் போற்று படத்துக்கும் என மொத்தம் 5 தேசிய விருதுகள் ஜூலை 22ம் தேதி வழங்கப்பட்டன.
பிறந்தநாளை கொண்டாடி வரும் சூர்யாவுக்கு சூப்பர் கிஃப்ட் என ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், விமர்சகர் பிஸ்மி போட்ட ட்வீட்டை வைத்து வம்பிழுத்து இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

சூர்யா பிறந்தநாள்
1975ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி நடிகர் சிவகுமார் மற்றும் லக்ஷ்மிக்கு மகனாக பிறந்த நடிகர் சூர்யா இன்று தனது 47வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். சினிமா பிரபலங்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும், தேசிய விருது வென்றதற்காக பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

தேசிய விருது
இயக்குநர் பாலா இயக்கத்தில் 2003ம் ஆண்டு சியான் விக்ரம், சூர்யா நடித்த பிதாமகன் படத்திற்காகவே சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், பல காலங்கள் கடந்து தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார். ஆஸ்கர் போட்டிக்கு வரை இந்த படம் சென்று பலரது பாராட்டுக்களை குவித்த நிலையில், நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், தற்போது கிடைத்துள்ள தேசிய விருதுக்காக பலரும் பாராட்டி வரும் நிலையில், சிலர் விமர்சனங்களையும் விவாதங்களையும் முன் வைத்துள்ளனர்.

சூர்யாவின் மானேஜர்
நடிகர் சூர்யாவின் மானேஜர் தேசிய திரைப்பட விருது தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருப்பதால், சூர்யாவுக்கோ அவரது படத்துக்கோ விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என வலைப்பேச்சு யூடியூப் தளத்தின் விமர்சகர் பிஸ்மி ட்வீட் போட்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது. மேலும், அது தொடர்பாக அவர்கள் ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளனர். நடிகர் சூர்யாவின் மானேஜர் உள்ளே இருந்ததால் தான் அவருக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது என்றும் பாஜக தென்னிந்தியா மற்றும் தமிழ்நாட்டை கைப்பற்றவே இப்படி விருதுகளை வாரிக் கொடுத்துள்ளதாகவும் கூறி உள்ளனர்.

பதில் சொல்லுங்க சூர்யா
இரவின் நிழல் சர்ச்சை காரணமாக பார்த்திபன் உடன் ட்விட்டர் சண்டை போட்டு வந்த ப்ளூ சட்டை மாறன், அவர் அமைதியாகவே அடுத்ததாக ரஜினிகாந்த் மற்றும் சூர்யா என வம்பிழுத்து வருகிறார். பிஸ்மி போட்ட ட்வீட்டை ஷேர் செய்து, மிஸ்டர் சூர்யா, உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம் என பதிவிட்டு இருக்கிறார். சூர்யா ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை தற்போது திட்டத் தொடங்கி உள்ளனர்.

ஷங்கர், தமன்னாவுக்கும் அவர் தான் மேனேஜர்
உங்க லாஜிக் படி பார்த்தா ஷங்கர் மற்றும் தமன்னாவுக்கும் அவர் தான் மேனேஜர். அவங்க எல்லாம் எத்தனை தேசிய விருது வச்சிட்டு சுத்துறாங்க.. எடுத்த ஒரு படமும் திருட்டு கதை.. இதுக்கு உனக்கு ரெஸ்பான்ஸ் ஒண்ணு தான் கேடு என ப்ளூ சட்டை மாறனையும் அவர் இயக்கிய ஆன்டி இண்டியன் படத்தையும் வெளுத்து வாங்கி வருகின்றனர் சூர்யா ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











