அதுக்குள்ள லலித் மோடியை கழட்டிவிட்டுட்டாரா? சுஸ்மிதா சென் இப்போ யார் கூட சுத்துறாருன்னு பாருங்க!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை சுஸ்மிதா சென் தனது முன்னாள் காதலர் ரோமன் ஷால் உடன் சுற்றித் திரியும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.
கடந்த ஆண்டு இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்து இருந்தனர். மேலும், சமீபத்தில் லலித் மோடி உடன் நடிகை சுஸ்மிதா சென் காதலில் விழுந்ததாக டேட்டிங் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், லலித் மோடி எங்கே காணோம் என்றும் மீண்டும் ரோமன் உடனே ரொமான்ஸா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மகள் பிறந்தநாள்
நடிகை சுஸ்மிதா சென்னின் மகள் ரெனி சென்னின் 13வது பிறந்தநாளை முன்னிட்டு மும்பையில் உள்ள சாண்டா க்ரூஸ் பகுதியில் சுஸ்மிதா சென் வலம் வந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன. இந்த திடீர் டிரெண்டிங்கிற்கு காரணமே சுஸ்மிதா சென் உடன் அவரது முன்னாள் காதலர் ரோமன் ஷால் இருந்தது தான்.

காதலும் பிரேக்கப்பும்
நடிகை சுஸ்மிதா சென் இதுவரை பல பிரபலங்களை காதலித்து பிரேக்கப் செய்துள்ளார். சமீபத்தில் அவரது டேட்டிங் லிஸ்ட் என டஜன் கணக்கான பிரபலங்களுடன் அவர் ஊர் சுற்றிய புகைப்படங்களும் கதைகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பின. அதற்கு காரணம் லலித் மோடியுடன் அவர் காதலில் விழுந்தார் என்கிற செய்தி தான்.

லலித் மோடியுடன் காதல்
ஐபிஎல் தலைவராக இருந்த லலித் மோடி மோசடி வழக்கில் சிக்கி சிறைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று வாழ்ந்து வரும் அவர், பாலிவுட் நடிகை சுஸ்மிதா சென்னுடன் டேட்டிங் செய்து வருவதாக பகிரங்கமாக போட்டோக்களை வெளியிட்டு அறிவித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் விரைவில் அது நடக்கும் என்றும் கூறியிருந்தார்.

கழட்டிவிட்ட சுஸ்மிதா
லலித் மோடி உடன் சுஸ்மிதா சென் டேட்டிங் செய்து வருவதை அவர் பகிரங்கமாக சொன்ன நிலையில், தற்போது அவரை விட்டு விட்டு தனது மகளின் பிறந்தநாளை முன்னாள் காதலர் ரோமன் ஷாலுடன் சுஸ்மிதா சென் கொண்டாடியதை பார்த்து பாலிவுட் ரசிகர்கள் குழம்பியே போய் விட்டனர். லலித் மோடி எங்கே? என்றும் அவரையும் கழட்டி விட்டிட்டீங்களா என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











