சிவகார்த்திகேயனை கலாய்த்தாரா அந்த பிரபலம்...ஓடவிடும் நெட்டிசன்கள்

சென்னை : பல படங்களில் நடித்து, எதுவும் போடாமல் போய், ஒரு கட்டத்தில் பட வாய்ப்புக்களே இல்லாமல் இருந்து வந்தார் அந்த பிரபல வாரிசு நடிகர். பிறகு வேறு வழியே இல்லாமல் ஹீரோவாக வந்த இமேஜை விட்டு, வில்லன் அளவிற்கு இறங்கி நடிக்க ஓகே சொன்னார். அதுவும் பெயர் வாங்கி, பல பட வாய்ப்புக்கள் வர துவங்கி விட்டனர்.

அதுவும் தொடர்ந்து வில்லன் ரோல்கள் மட்டுமே வந்ததாம். பட வாய்ப்பிற்காக வில்லன் ரோலுக்கு ஓகே சொன்னது தப்பாய் போய் விட்டதே. விட்டால் நிரந்தர வில்லன் நடிகராக்கி விடுவார்கள் போலவே என சுதாரித்து கொண்ட வாரிசு நடிகர், இனி நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என தடாலடியாக கன்டிஷன் போட துவங்கி விட்டார்.

 Did this hero trolls Sivakarthikeyan in social media

வேறு வழியில்லாமலும், கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும் என லோ பட்ஜெட் படம் ஒன்றில் வாரிசு நடிகரை ஹீரோவாக போட்டனர். அடுத்தடுத்து அவர் நடித்த படங்களும் கிளிக் ஆனதால், மீண்டும் ரசிகர்கள் நம்மை ஹீரோவாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என குஷியாகி விட்டார் வாரிசு நடிகர். டைரக்டர்கள் பலரையும் அழைத்து கதை கேட்க துவங்கினார். இதன் விளைவாக பெருமாள் டைரக்டரே வந்து மாஸ் ஹீரோ ரேஞ்சிற்கு பில்டப் கொடுத்து பட வாய்ப்பு கொடுத்தார். இதனால் ஓவர் கெத்து காட்டி வந்தார் வாரிசு நடிகர்.

இந்த நிலையில், சினிமா ஃபைனான்சியர் வீட்டு கல்யாணத்திற்கு சென்று தனக்கு இருக்கும் மாஸ் இமேஜை மீடியாக்களுக்கு எக்ஸ்போஸ் பண்ண நினைத்து சென்றார் வாரிசு நடிகர். ஆனால் அவர் கொஞ்சமும் எதிர்பார்க்காமல், இவர் உள்ளே நுழைந்த நேரம் பார்த்து சிவகார்த்திகேயன் வெளியே வந்தார். சிவகார்த்திகேயன் செல்ல வழி ஒதுக்கிய பாதுகாவலர்கள் கூட்டத்தை க்ளியர் செய்தனர். இதில் கூட்டதோடு கூட்டமாக வாரிசு நடிகரும் ஒதுக்கி நிறுத்தப்படார். நினைத்ததற்கு மாறாக நடந்தால் பெரிய ஷாக்கான வாரிசு நடிகர், கெத்தை விட்டுக் கொடுக்காமல் திருமணத்தில் வாழ்த்தி விட்டு வந்து விட்டார்.

இருந்தாலும் தனக்கு நடந்ததை ஏற்க முடியாத வாரிசு நடிகர் சோஷியல் மீடியாவில், யாரு எல்லாம் மாஸ் பண்ணுறதுன்னு ஒரு விவஸ்தை இல்லாம போச்சு...தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். உண்மையான திறமைக்கு ஆதரவு கொடுக்கனும் என மறைமுகமாக சிவகார்த்திகேயனை கலாய்த்து போஸ்ட் போட்டார். ஆனால் ஷார்ப்பான நெட்டிசன்கள், இவர் சிவகார்த்திகேயனை தான் கலாய்க்கிறார் என்பதை புரிந்து கொண்டு விட்டனர். சிவகார்த்திகேயனை கலாய்த்து போஸ்ட் போட போய், இப்போது இவரை கலாய்த்து கழுவி ஊற்றி வருகின்றனர் நெட்டிசன்கள்.

நீங்கள் சொன்னாலும் சொல்லா விட்டாலும் சிவகார்த்திகேயன் திறமைசாலி தான். சும்மா இல்லை...கடுமையான உழைப்பு தான் அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது. எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் டாப் ஹீரோவாக வளர்ந்து, 100 கோடி வசூல் நாயகன் என்ற பெயரை பெற்றுள்ளது சாதாரண விஷயமல்ல என சிவகார்த்திகேயனை புகழ்ந்து நெட்டிசன்கள் பாராட்டு மழை பொழிய துவங்கி விட்டனர். இதை கடுப்பான வாரிசு நடிகர், பதறி அடித்துக் கொண்டு தனது போஸ்டை நீக்கி விட்டார்.

ஆனால் அதை ஸ்கிரீன் ஷார்ட் எடுத்து வைத்து, அதை வைத்தே விடாமல் வாரிசு நடிகரை கழுவி ஊற்றி வருகிறார்கள் நெட்டிசன்கள். என்னடா நாம் என்ன செய்தாலும் அதற்கு நேர்மாறாக நடந்து, நமக்கே வினையாக முடிகிறதே என நொந்து கொண்டுள்ளாராம் வாரிசு நடிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X