புராண படத்தில் நடிக்க 12 கோடி சம்பளம் கேட்ட நடிகை...பதறிப்போன படக்குழு
மும்பை : ராமாயணம் உள்ளிட்ட பல புராணங்களை அடிப்படையாக வைத்து பல மொழிகளில் பல படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு புராண கதைகளையும், நாவல்களையும் மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அப்படி ராமாயணத்தை சீதையின் பார்வையில் சொல்லும் முயற்சியாக புதிய படம் ஒன்றை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தை அலவுகிக் தேசாய் இயக்க உள்ளார். பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்ட படமாக இப்படத்தை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் சீதை கேரக்டரில் நடிக்க முதலில் கரீனா கபூர் கானை தான் கேட்டுள்ளனர். இந்த படத்திற்கு ஹீரோயினுக்கு ரூ.6 முதல் 8 கோடி வரை சம்பளம் முடிவு செய்து வைத்துள்ளனர். ஆனால் இதில் நடிக்க கரீனா ரூ.12 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.
இது புராண கதை என்பதால் இவ்வளவு அதிக தொகையை கேட்டுள்ளாராம். அது மட்டுமில்லாமல் இந்த படத்தின் படப்பிடிப்பு 8 முதல் 10 மாதங்கள் வரை நடக்கும் என்பதால் அதிக தொகையை சம்பளமாக அவர் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழு அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வளவு அதிக தொகையை சம்பளமாக கொடுக்க படக்குழு ஒப்புக் கொண்டதா, இந்த படத்தில் கரீனா கபூர் நடிப்பது உறுதியாகி விட்டதா என்பது போன்ற எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
கரீனா கபூர் அடுத்ததாக வீரி தி வெட்டிங் 2, ஹன்சல் மேத்தா இயக்க போகும் படம் ஆகியவற்றிலும் நடிக்க போகிறாராம். இந்த படங்கள் சிறிய பட்ஜெட் படங்கள். ஓரிரு மாதங்களில் முடிந்து விடும். ஆனால் ராமாயணம் பெரிய பட்ஜெட் படம் என்பதால் பெரிய தொகையை சம்பளமாக அவர் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











