Don't Miss!
- News
400அடி பள்ளம்.. 8நாள் போராட்டம் -நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய 6வது நபர் மீட்பு - நடந்தது என்ன?
- Sports
உப்புக்கு சப்பு இல்லாத போட்டி..? யார் சொன்னது ? கடைசி ஐபிஎல் லீக் போட்டியின் சம்பவங்கள்
- Finance
மின்சார வாகனங்கள் உற்பத்திக்காக முதலீடு.. LML-ன் பிரம்மாண்ட திட்டம்..!
- Automobiles
டொயோட்டா ஃபார்ச்சூனர் என்ன ஆகப்போகுதோ? ஜீப் மெரிடியன் காரின் டெலிவரி பணிகள் விரைவில் தொடக்கம்!
- Technology
லுக் வேற லெவல்: புதிய எமரால்டு பிரவுன் வண்ண விருப்பத்தில் சாம்சங் கேலக்ஸி எம்33, எம்53 5ஜி!
- Lifestyle
வார ராசிபலன் 22.05.2022-28.05.2022 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்களாம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வீரமே வாகை சூடும் என்னப்பா ஆச்சு...ரிலீஸ் ஆச்சா ? இல்லையா?
சென்னை : விஷாலின் வீரமே வாகை சூடும் படம் என்னாச்சு, ரிலீஸ் ஆகி விட்டதா, இல்லையா. ஒரு தகவலும் வெளியிடவில்லையே என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். ரிலீஸ் தேதியை மாற்றி விட்டார்களா, எதுவும் சொல்லவில்லையே எனவும் அனைவரும் கேட்க துவங்கி விட்டனர்.
அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் வீரமே வாகை சூடும். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில் டிம்பிள் ஹயாத்தி லீட் ரோலில் நடித்துள்ளார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சாமானிய மனிதர் ஒருவர் அதிகாரம் மிக்க அதிகாரிகளை கேள்வி கேட்பது தான் வீரமே வாகை சூடும். இந்த படத்தில் விஷால் போலீஸ் ரோலில் நடித்துள்ளார்.
கோவாவில்
காதலரை
மணந்தார்
நாகினி
நடிகை
மெளனி
ராய்..
டிரெண்டாகும்
புகைப்படங்கள்..
வாழ்த்தும்
ரசிகர்கள்

இரு மொழிகளில் விஷால் படம்
தமிழில் வீரமே வாகை சூடும் என்ற பெயரிலும், தெலுங்கில் சாமானியடு என்ற பெயரிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்ட்டரி தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஷுட்டிங் கடந்த ஆண்டு இறுதியில் நிறைவு செய்யப்பட்டது.

பொங்கல் ரேசிலிருந்து விலகல்
கொரோனா பெருந்தொற்று காரணமாக பல பெரிய பட்ஜெட் படங்கள் இந்த ஆண்டு பொங்கல் ரேசில் இருந்து பின்வாங்கிய நிலையில், பல சிறிய பட்ஜெட் படங்கள் துணிச்சலாக பொங்கலன்று தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டன. வீரமே வாகை சூடும் படமும் ஜனவரி 14 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் முடிவை மாற்றி, ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று வீரமே வாகை சூடும் படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்தனர்.

நேற்றும் ரிலீஸ் இல்லை
இதனால் குடியரசு தினத்திற்கு சோலோவாக வீரமே வாகை சூடும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காரணம் ஏதும் சொல்லாமல், அறிவிப்பும் வெளியிடாமல் படத்தின் ரிலீஸ் தேதியை கடைசி நிமிடத்தில் தள்ளிவைத்துள்ளனர். இதனால் ஜனவரி 26ம் தேதி ரிலீசாகும் என கூறப்பட்ட இந்த படம் நேற்று ரிலீசாகவில்லை. புதிய ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவில்லை.

புதிய ரிலீஸ் தேதி இதுவா
வீரமே வாகை சூடும் படம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், பிப்ரவரி 4ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, ஒத்திவைக்கப்பட்ட பல படங்கள் பிப்ரவரி 4ம் தேதியையே குறிவைத்துள்ளன. ஆனால் படக்குழு சார்பில் புதிய ரிலீஸ் தேதி ஏதும் வெளியிடப்படவில்லை.