ஜெயிலர் மற்றும் டாக்டர் படங்களின் காப்பியா விஜய்யின் லியோ இன்ட்ரோ ப்ரோமோ.. கலாய்க்கும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தின் டைட்டில் அறிமுக வீடியோ நேற்று வெளியான நிலையில், 15 மில்லியன் வியூஸ் கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
சாக்லேட் ஃபேக்டரி, கூர்வாள் செய்யும் பட்டறை என நடிகர் விஜய்யை டபுள் ஷேடில் காட்டி உள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
ஆனால், அதே சமயம் சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் ரஜினிகாந்தின் ஜெயிலர் படங்களில் இருந்து சீனை சுட்டு இந்த ப்ரோமோவை அவர் உருவாக்கி உள்ளதாக ட்ரோல்கள் தெறிக்கின்றன.

டிரெண்டிங்கில் முதலிடம்
நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட லியோ படத்தின் அறிமுக ப்ரோமோ வீடியோ இதுவரை 15 மில்லியன் வியூஸ் மற்றும் 1.2 மில்லியன் லைக்ஸ் கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. நடிகர் விஜய்யின் லுக் மற்றும் ப்ரோமோ காட்சிகள் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்து இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால், அதே சமயம் லியோ ப்ரோமோ வீடியோ தொடர்பான ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.

லியோ காபி
தளபதி 67 படத்திற்கு குருதி அல்லது குருதிப்புனல் என டைட்டில் வைக்கப்படும் என தகவல்கள் இறுதி நேரத்தில் வெளியான நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக லியோ என்கிற படு மாஸான டைட்டிலை லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். கடைசி வரை கசியாமல் டைட்டில் இருந்த நிலையில், லியோ டைட்டிலை பார்த்த அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் லியோ காபி என கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.

ஜெயிலர் காப்பி
சூப்பர் ஸ்டார் சர்ச்சை கிளம்பியதில் இருந்தே விஜய் படம் தொடர்பாக எந்தவொரு விஷயம் வந்தாலும் அஜித் ரசிகர்களை விட அதிகபட்சமாக இறங்கி ட்ரோல் செய்வது ரஜினிகாந்த் ரசிகர்கள் தான். விக்ரம் படத்தின் ப்ரோமோ வித்தியாசமாக இருந்ததாகவும் ஆனால், லியோ படத்தின் இன்ட்ரோ ப்ரோமோவில் உள்ள காட்சிகள் அப்படியே ஜெயிலர் படத்தின் அறிமுக ப்ரோமோ போலவே உள்ளது என ரஜினி ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

பேக்கரி ஓனர்
ஆக்ஷன் பிளஸ் காமெடி பிளஸ் சென்டிமென்ட் கலந்து உருவான பேக்கரி ஓனர் என வடிவேலுவின் கிரி பட காமெடி காட்சிகளை போட்டு விஜய்யின் லியோ படத்தின் அறிமுக ப்ரோமோ வீடியோவை ரஜினிகாந்த் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

டாக்டர் சீனும் இருக்கே
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் ஐஸ்க்ரீம் கடைக்காரர் போல நடித்து டான் என வில்லன் வினய்யை சிவகார்த்திகேயன் ஏமாற்றுவார். அந்த காட்சியை அப்படியே காப்பி அடித்து ஐஸ் க்ரீமுக்கு பதிலாக சாக்லேட் கம்பெனியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாற்றி உள்ளார் என சிவகார்த்திகேயன் ரசிகர்களும் லியோ படத்தின் இன்ட்ரோ ப்ரோமோவை பங்கம் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











