விஜய் குடும்பத்துடன் விருமன் ஃபர்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்தாரா?...எங்கு பார்த்தார்?

சென்னை : கொம்பன் படத்தை இயக்கிய டைரக்டர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் விருமன். இந்த படம் நேற்று ரிலீஸ் செய்யபட்டது.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கார்த்தி மற்றும் அதிதியின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த படம் வெற்றி அடைய ட்விட்டரில் நேற்று பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

பருத்திவீரன் படத்திற்கு பிறகு கார்த்தி, பக்கா கிராமத்து இளைஞராக தோன்றி உள்ள படம் என்பதாலும், மதுரை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்தால் கிராமப்புறங்களில் இந்த படத்திற்கு வரவேற்கு அதிகமாக காணப்படுகிறது.

விருமன் படம் பார்த்த ஷங்கர்

விருமன் படம் பார்த்த ஷங்கர்

டைரக்டர் ஷங்கர், தனது மனைவி மற்றும் மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் சென்று சென்னை ரோகினி சில்வர் ஸ்க்ரீன் தியேட்டரில் விருமன் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ படம் பார்த்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் தனது மகள் நடிப்பு பற்றி, ஒரு டைரக்டராக ஷங்கர் என்ன கமெண்ட் அல்லது ரெவ்யூ கொடுத்துள்ளார் என்பதை அறிய பலரும் ஆர்வமாக உள்ளனர்.

விஜய்யும் குடும்பத்துடன் வந்தாரா?

விஜய்யும் குடும்பத்துடன் வந்தாரா?

இதில் பெரிய சர்ப்ரைஸ் என்னவென்றால் ஷங்கர் குடும்பத்துடன் சேர்ந்து நடிகர் விஜய், தனது மனைவி சங்கீதாவுடன் சென்று விருமன் ஃபர்ஸ்ட டே ஃபர்ஸ்ட் ஷோ படம் பார்த்ததாக சோஷியல் மீடியாக்களில் வேகமாக தகவல் பரவி வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் ஆச்சரியத்துடன், போட்டோ கிடைக்குமா? படம் பார்த்து விட்டு விஜய் என்ன சொன்னார் என கேட்க துவங்கி விட்டனர்.

விஜய் இப்போ எங்க இருக்கார்?

விஜய் இப்போ எங்க இருக்கார்?

ஆனால் விசாரித்து பார்த்ததில் அந்த தகவல் உண்மையில்லை என சொல்லப்படுகிறது. விஜய், விருமன் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்ததாக சொல்லப்படுவது வெறும் வதந்தி மட்டுமே. விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு படத்தின் ஷுட்டிங்கிற்காக விசாகப்பட்டினத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இது தான் விஷயமா?

இது தான் விஷயமா?

நடிகர் விஜய், கமல் நடித்த விக்ரம படத்தை இரண்டு முறை பார்த்ததாகவும், படம் பார்த்து விட்டு, Mind Blowing என தனக்கு மெசேஜ் செய்ததாகவும் சமீபத்தில் தனது பேட்டி ஒன்றில் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். கடந்த 2 நாட்களாக இரு பற்றிய தகவல்கள் சோஷியல் மீடியாவில் அதிகம் பரவியதால், ஒரு பரபரப்பாபிற்காக விருமன் படத்தையும் விஜய் பார்த்ததாக யாரோ வதந்தி கிளப்பி விட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

 நல்லா கிளப்பி விடுறாங்கப்பா

நல்லா கிளப்பி விடுறாங்கப்பா

டைரக்டர் ஷங்கர், விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகரிடம் அசிஸ்டென்ட்டாக பணியாற்றியவர். அதனால் விஜய்யை சிறு வயதில் இருந்தே தெரியும். இவர்கள் இருவரும் 2012 ம் ஆண்டு நண்பன் படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர்.இவர்கள் இருவரின் குடும்பத்திற்கும் நல்ல நட்பு இருப்பதால், அதன் அடிப்படையில் ஷங்கர் மகள் நடித்த படம் என்பதாலும் சூர்யா-கார்த்தி இருவரும் விஜய்க்கு நல்ல நண்பர்கள் என்பதாலும் அவர் படம் பார்க்க வந்திருக்கலாம் என்று சிலர் நினைத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X