கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பில் விஜய் நடிக்கிறாரா? தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன?
சென்னை: கிரிக்கெட் வீரர்கள் அரசியல் தலைவர்களாக மாறி வந்த நிலையில், தற்போது கிரிக்கெட் வீரர்களின் கவனம் சினிமா பக்கம் திரும்பி இருக்கிறது.
ஹர்பஜன் சிங் பிரண்ட்ஷிப் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான நிலையில், இர்ஃபான் பதான் விக்ரமின் கோப்ரா படத்தின் மூலம் விரைவில் கோலிவுட்டில் நடிகராக அறிமுகமாகவுள்ளார்.
தோனியின் அனிமேஷன் படம் திரைப்படமாக அதர்வா எனும் பெயரில் உருவாகி வரும் நிலையில், தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் முயற்சியில் தோனி ஈடுபட்டு வருவதாகவும் தமிழில் தான் படத்தை தயாரிக்கப் போகிறார் என பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

நண்பர் தயாரிப்பில்
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான தோனி பயோபிக் திரைப்படம் அப்பவே 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் அடித்தது. அந்த படத்தை தோனி தயாரிக்கமல் அவரது நண்பரும் பிசினஸ் பார்ட்னருமான அருண் பாண்டே என்பவர் தான் தயாரித்தார். அந்த படம் பெற்ற வெற்றியை பார்த்ததில் இருந்தே தோனிக்கு சினிமாவில் ஒரு பெரிய நாட்டம் உருவானது.

அதர்வா - அனிமேஷன்
தோனியை கதையின் நாயகனாக்கி அதர்வா எனும் அனிமேஷன் படைப்பு உருவாகி வருகிறது. அதற்கான வேலைகளையும் கவனித்து வரும் தோனி கிரிக்கெட்டிற்கு பிறகு தனது அடுத்த இன்னிங்ஸை சினிமா தயாரிப்பாளராக தொடங்க தோனி புரொடக்ஷன்ஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையே ஆரம்பித்து இருப்பதாக கூறுகின்றனர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்ததில் இருந்தே ஆண்டு தோறும் அதற்கான பிரத்யேக விளம்பர படங்களில் தொடர்ந்து தோனி நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர்களை விட தோனி செம ஹேண்ட்ஸமாக இருக்கிறார் என ஏகப்பட்ட ரசிகர்கள் பாராட்டிய நிலையில், ஹீரோவாகவே நடிங்க என்றும் அறிவுரை வழங்கி உள்ளனர். இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான விளம்பரத்திலும் தோனி அசத்தலாக நடித்து இருந்தார். விரைவில் இவரும் ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான் போல நடிகராக வருவாரா? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தயாரிப்பாளராக மாறி விட்டார் தோனி.

தல தளபதி கூட்டணி
அஜித் மற்றும் விஜய் இணைந்து விரைவில் படம் பண்ண போவதாக கங்கை அமரன் சொன்னதாக தகவல்கள் தீயாய் பரவின. ஆனால், அந்த தல தளபதி கூட்டணி நடைபெறவில்லை என்றும் இந்த தல தளபதி கூட்டணி தான் எதிர்பார்க்கலாம் என்றும் இன்னொரு தகவல் சமூக வலைதளங்களை கடந்த சில நாட்களாக ஆட்சி செய்து வருகின்றன. தோனி தயாரிப்பில் விஜய் நடிக்கப் போகிறார் என்று கூறுகின்றனர். மேலும், ஜூன் 22 நடிகர் விஜய்யே இது குறித்து அறிவிப்பார் என்றும் கிளப்பி விட்டனர்.

உண்மை என்ன
ஆனால், இதுவரை அப்படி எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், நடிகர் விஜய் தனது பிறந்தநாளில் தளபதி 66 படமான வாரிசு படத்தின் 3 பிரத்யேக போஸ்டர்களை மட்டுமே வெளியிட்ட நிலையில், இதுவும் முற்றிலும் ஒரு வதந்த் தான் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. முன்னதாக நடிகை நயன்தாரா தோனி தயாரிப்பில் நடிக்கப் போகிறார் என்று கிளப்பி விட்டனர். அதுபோலத்தான் இதுவும் என்கின்றனர். ஆனால், விரைவில் நடிகர் தோனி ஒரு படத்தை தயாரிக்கப் போகிறார் என்பது மட்டும் உறுதி ஆகி இருக்கிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆலோசனைகளில் ஈடுபட அடிக்கடி சென்னைக்கு விசிட் அடித்து வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











