விஜய் ஆன்டனி படத்தில் நடிக்கிறாரா விஜயகாந்த்...உண்மையை உடைத்த பிரேமலதா
சென்னை : விஜய் ஆன்டனி ஹீரோக நடிக்கும் புதிய படம் ஒன்றில் விஜயகாந்த் முக்கிய ரோலில் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இது பற்றிய மிக முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல அரசியல் வட்டாரங்களிலும் கேப்டன் என அனைவராலும் அழைக்கப்படுபவர் விஜயகாந்த். சினிமாவில் உச்சத்தில் இருந்த போதே அரசியலுக்கு வந்து, தனிக்கட்சியும் துவக்கினார் புரட்சி கலைஞர் விஜயகாந்த்.
தமிழக அரசியலில் அழுத்தமான இடத்தை பிடித்து, மூன்றாவது பெரிய கட்சி, அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் விஜயகாந்த். எம்எல்ஏ, எதிர்க்கட்சி தலைவர் என ஆன பிறகு, சினிமாவில் நடிப்பதை கைவிட்டு, தீவிர அரசியலில் இறங்கி, கலக்கினார்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட விஜயகாந்த்
கடைசியாக 2015 ல் சகாப்தம் என்ற படத்தில் நடித்தார் விஜயகாந்த். இந்த படத்தில் தான் அவரின் இளைய மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் அதற்கு பிறகு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அதற்கு பிறகு சினிமா, அரசியல் என இரண்டிலும் ஆக்டிவாக செயல்பட முடியாமல் இருந்தார் விஜயகாந்த்.

மீண்டும் நடிக்க வருகிறாரா
இந்நிலையில் டைரக்டர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆன்டனி ஹீரோவாக நடிக்கும் புதிய படம் ஒன்றில் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் கூறப்பட்டது. இந்த படத்திற்கு மழை பிடிக்காத மனிதன் என வித்தியாசமான டைட்டிலும் வைக்கப்பட்டதாலும், நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜயகாந்த் நடிக்கும் படம் என்பதாலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

விரைவில் ஷுட்டிங் நிறைவு
இந்த படத்தில் சரத்குமார், மேகா ஆகாஷ் முக்கிய ரோல்களில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்த படம் 2014 ல் விஜய் ஆன்டனி நடிப்பில் வெளிவந்த சலீம் படத்தின் இரண்டாம் பாகமாக இது தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் சில மாதங்களில் இந்த படத்தின் ஷுட்டிங் நிறைவடைய உள்ளது.

சிறப்பு தோற்றத்தில் விஜயகாந்த்
மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் காட்சிகளை கடைசியாக எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், இந்த காட்சிகள் விஜயகாந்த்தின் வீட்டிலேயே வைத்து எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது.

பிரேமலதா என்ன சொல்கிறார்
இது பற்றி விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த்திடம் கேட்ட போது, அனைவரையும் அதிர்ச்சி அடைய வைக்கும் தகவல் ஒன்றை தெரிவித்தார். அவர், விஜயகாந்த் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அவர் மீண்டும் படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் தவறானது. விஜய் ஆன்டனியின் மழை பிடிக்காத மனிதன் மட்டுமல்ல வேறு எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை என்றார்.

ரசிகர்கள் கேள்வி
பிரேமலதாவின் இந்த பதில் விஜயகாந்த் ரசிகர்களையும், சினிமா வட்டாரங்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது தவறான தகவல் என்றால் இதுவரை பிரேமலதா விஜயகாந்த் மறுப்பு ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தது ஏன் எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











