விஷால் ஜாதகத்தில் தோஷமா? கோயில் டூர், பரிகாரங்கள், இலவச திருமணங்கள் எல்லாமே அதுக்குத்தானா?

சென்னை: நடிகர் விஷால் பல கோயில்களுக்கு சென்று பரிகாரங்கள் செய்து வரும் நிலையில், அவருக்கு ஜாதகத்தில் தோஷம் இருப்பதால் தான் இப்படி பரிகாரங்கள் செய்து வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் 11 ஏழை ஜோடிகளுக்கு விஷால் இலவச திருமணம் செய்து வைத்ததும் இதன் ஒரு அங்கமாகத்தான் என்றும் காசிக்கு சென்று வந்ததும் இதற்காகத்தான் என்றும் கூறுகின்றனர்.

ஏற்கனவே இரு பெண்கள் விஷாலின் வாழ்வில் வந்த நிலையிலும், அவர்களுடன் விஷாலுக்கு திருமணம் ஆகாததற்கு காரணமும் அந்த தோஷம் தான் என்கின்றனர்.

திருமணம் ஆகல

திருமணம் ஆகல

45 வயதாகியும் நடிகர் விஷாலுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் மற்றும் விஷால் காதலித்து வருவதாக ஆரம்பத்தில் தகவல் ஒன்று பரவியது. பின்னர் அனிஷா என்கிற பெண்ணுடன் விஷாலுக்கு நிச்சயதார்த்தமே நடைபெற்ற நிலையில், கடைசியில் திருமணம் நடைபெறாமல் அந்த சம்பந்தமும் விலகிச் சென்றது.

காசிக்குப் போன விஷால்

காசிக்குப் போன விஷால்

கல்யாணமே ஆகவில்லை நான் காசிக்கே போகிறேன் என சமீபத்தில் நடிகர் விஷால் காசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்று வந்ததும் திருமண தடை நீங்கவே என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. காசிக்கு விஷால் சென்று வந்த நிலையில், பிரதமர் மோடிக்கு ட்வீட் போட, பதிலுக்கு அவரும் போட்ட ட்வீட் விஷால் அரசியல் என்ட்ரி கொடுக்கப் போகிறாரா? என்கிற கேள்விகளை கிளப்பின.

11 ஜோடிகளுக்கு

11 ஜோடிகளுக்கு

சமீபத்தில் 11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணமும் செய்து வைத்து பல குடும்பத்தின் ஆசியையும் நடிகர் விஷால் பெற்றார். கண்டிப்பாக விரைவில் காதல் திருமணம் செய்து கொள்வே என அந்த நிகழ்ச்சியிலும் பேசி இருந்தார் விஷால். இந்நிலையில், அவரது ஜாதகத்தில் தோஷம் இருப்பதால் தான் இப்படி செய்து வருகிறார் என சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜாதகத்தில் தோஷம்

ஜாதகத்தில் தோஷம்

நடிகர் விஷாலின் திருமணம் இத்தனை ஆண்டுகளாக தடைபட்டு வரக் காரணம் அவருக்கு நாக தோஷம் உள்ளதாகவும் அதனால் தான் இப்படியெல்லாம் நடப்பதாக ஜோஷியர்கள் சொன்ன நிலையில் தான் தற்போது அவர் பரிகாரங்களை செய்து வருகிறார் எனக் கூறுகின்றனர்.

தோஷ நிவர்த்தி

தோஷ நிவர்த்தி

சமீபத்தில் நடிகர் விஷால் தர்மசாலா மற்றும் குக்கே சுப்பிரமணிய கோயிலுக்கு சென்று ஷர்ப்ப தோஷ நிவர்த்தி பூஜையும், ஆஷ்லேஷ பலி பூஜையும் செய்துள்ள படங்கள் தற்போது வெளியாகி காட்டுத் தீயாக பரவி வருகின்றன. அனைத்து தோஷங்களும் விரைவில் நீங்கிய பின்னர் விஷால் திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாராவும் இப்படித்தான்

நயன்தாராவும் இப்படித்தான்

திருமணத்துக்கு முன்னதாக விக்னேஷ் சிவன் உடன் நடிகை நயன்தாராவும் ஏகப்பட்ட கோயில்களுக்கு சென்று வந்ததும் இதே போல தோஷ நிவர்த்தி செய்யத்தான் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், விஷால் கோயில் கோயிலாக சென்று தோஷ நிவர்த்தி பரிகாரங்கள் செய்து வருவதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X