ஏகே 62 படத்திற்கு அஜித் சம்பளம்...அதற்கு தயாரிப்பாளர் என்ன சொல்லிருக்கார் தெரியுமா?
சென்னை : ஏகே 62 படத்திற்காக அஜித் கேட்க சம்பளம் மற்றும் அதற்கு தயாரிப்பாளர் சொன்ன பதிலும் தான் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது வேற லெவல் படமாக இருக்கும் போல என ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர்.
வலிமை படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவே கொண்டாடும் ஹீரோவாக மாறி உள்ளார் அஜித். நெகடிவ் விமர்சனங்களை பெற்ற போதிலும் வலிமை படம் 25 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதோடு 200 கோடி கிளப்பிலும் இணைந்துள்ளது. இதனால் காதல் மன்னன் என்பதை தாண்டி, தற்போது வசூல் மன்னன் என்றும் அஜித்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஏகே 62 அறிவிப்பு
வலிமை படத்தை தொடர்ந்து அதே கூட்டணியில் ஏகே 61 படத்தில் நடிக்க உள்ளார் அஜித். இப்படத்தின் ஷுட்டிங் இன்னும் சில வாரங்களில் துவங்கப்பட உள்ளது. ஏகே 61 படம் துவங்குவதற்கு முன்பே ஏகே 62 படம் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டு, ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளனர். விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், நயன்தாரா, வடிவேலு ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அஜித் கேட்ட சம்பளம்
ஏகே 62 படத்திற்காக லைகா ப்ரொடக்ஷன்ஸ், அஜித்திற்கு 105 கோடிகளை சம்பளமாக பேசி உள்ளதாம். இந்த படத்திற்காக அஜித் 100 கோடி சம்பளம் கேட்டாராம். ஆனால் அஜித்தின் சமீபத்திய படங்கள் பெற்று வரும் வெற்றி, ரசிகர்கள் அந்த படங்களுக்கு கொடுக்கும் வெற்றியை பார்த்து குஷியான லைகா நிறுவனம் அஜித் கேட்டதை விட கூடுதலாக 5 கோடிகளை சம்பளமாக தருவதாக கூறி உள்ளதாம்.

ஏகே 62 எப்போ ஆரம்பம்
ஏகே 61 படத்தை 2022ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதால், ஏகே 62 படத்தின் ஷுட்டிங் இந்த ஆண்டு இறுதியில் துவங்கப்பட உள்ளதாம். 2023 ம் ஆண்டு கோடை விடுமுறையில் ஏகே 62 படத்தை ரிலீஸ் செய்ய போகிறார்களாம். விரைவில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், படக்குழுவினர் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்பட உள்ளதாம்.
Recommended Video

சம்பளத்தை உயர்த்தி அஜித்
அஜித் இதுவரை ஒரு படத்திற்கு 55 கோடி தான் சம்பளமாக வாங்கி வந்தார். வலிமை படத்திற்கும் இதே சம்பளம் தான் வாங்கி உள்ளார். ஆனால் ஏகே 62 படத்தில் அவரது சம்பளம் அப்படி இரு மடங்காகி உள்ளது. வலிமை படத்திற்கு பிறகு அஜித்தும் சம்பளத்தை உயர்த்தி உள்ளார். தயாரிப்பு நிறுவனமும் சம்பளத்தை உயர்த்தி உள்ளது தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.


Click it and Unblock the Notifications











