விக்ரம் படத்திற்காக சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா...நம்பவே முடியல
சென்னை : விக்ரம் படத்திற்காக சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் படம் ரசிகர்களின் ஆதரவுடன் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் தொடர்ந்து உலகம் அளவில் வசூலை குவிக்க துவங்கி உள்ளது. உலக அளவில் முதல் 3 நாட்களில் 150 கோடிகளை இந்த படம் வசூல் செய்துள்ளது.

சூர்யாவின் ரோலக்ஸ் ரோல்
இந்த படத்தில் கமலுக்கு இருக்கும் அதே ஆதரவு, சூர்யாவின் ரோலுக்கும் ரசிகர்கள் கொடுத்துள்ளனர். விக்ரம் படத்தில் சூர்யா, ரோலக்ஸ் என்ற ரோலில் நடித்துள்ளார். சூர்யா என்ற பெயரை விட ரோலக்ஸ் என்ற பெயர் தான் தற்போது மிக பிரபலமாகி உள்ளது. ட்விட்டரில் ரோலக்ஸ் என்ற வார்த்தை செம டிரெண்டாகி வருகிறது.

5 நிமிட வில்லன் ரோல்
படத்தின் க்ளைமாக்சில் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே சூர்யா நடிக்கும் சீன் இடம்பெறுகிறது. கேங்ஸ்டர் ரோலில் சூர்யா நடித்த இந்த கேரக்டர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பட ரிலீசிற்கு பிறகும் சூர்யாவின் ரோலை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் விக்ரம் படத்தில் நடித்தவர்களின் சம்பளம் பற்றிய விபரம் சமீபத்தில் வெளியானது.

உணர்ச்சிவசப்பட்ட சூர்யா
ஆனால் சூர்யா தான் நடித்த 5 நிமிட ரோலக்ஸ் ரோலிற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படாமல் இருந்தது. லேட்டஸ்ட் தகவலின் படி விக்ரம் படத்தில் நடிப்பதற்காக லோகேஷ் கனகராஜ் கதை சொன்ன போது, சூர்யா உடனே ஓகே சொல்லி விட்டாராம். தனது கனவு நினைவான தருணம் என உணர்ச்சி வசப்பட்டு ட்வீட் போட்டிருந்தார். கமலை அண்ணா என்று குறிப்பிட்டு ட்வீட் போட்டிருந்தார் சூர்யா. கமலும் பதிலுக்கு தம்பி சார் என குறிப்பிட்டு பதில் பதிவிட்டிருந்தார்.

கமல் மீட் பண்ணவேயில்லையா
ஆனால் விக்ரம் படத்தில் கமலும், சூர்யாவும் இணைந்து நடிக்கும் சீன் என்பது கிடையாது. ஒரே ஒரு நிமிட காட்சியில் தான் இருவரும் காட்டப்படுவார்கள். இந்த படத்தின் காட்சிகளை எடுக்கப்பட்ட போது கடைசி நிமிடத்தில் தான் சூர்யாவும், கமலும் சந்தித்து கொண்டனராம். அதுவும் சூர்யா, விமானத்தில் நேரமானதால் அவசரமாக கிளம்பி சென்று விட்டாராம்.

சூர்யா வாங்கிய சம்பளம்
விக்ரம் படத்தில் நடிப்பதற்காக சூர்யா சம்பளம் ஏதும் வாங்கவில்லையாம். கமல் மீதான மரியாதை காரணமாக சூர்யா சம்பளமே வேண்டாம் என சொல்லி விட்டாராம். கமலுடன் நடிப்பது, அதுவும் தன்னுடைய நீண்ட நாள் கனவான வில்லன் ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் சம்பளமே வேண்டாம் என சொல்லி விட்டாராம்.


Click it and Unblock the Notifications











