சூர்யா 40 – வாடிவாசல் ஃபஸ்ட்லுக்...என்ன ஒற்றுமைன்னு தெரியுமா ?
சென்னை : சூர்யா தற்போது அடுக்கடுக்காக பல படங்களில் நடித்து வருகிறார். கவுதம் மேனன் இயக்கும் நவரசா வெப் சீரிஸ் தொடர்பான அப்டேட்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.
நவரசா வெப் சீரிஸ், வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல், பாண்டிராஜ் இயக்கும் சூர்யா 40 உள்ளிட்ட படங்களில் ஒரே சமயத்தில் நடித்து வருகிறார் சூர்யா. வாடிவாசல் படம் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்ட பழிவாங்கும் கதை என கூறப்படுகிறது.

சூர்யாவின் பிறந்தநாளான ஜுலை 22 ம் தேதி அன்று மாலை 6 மணிக்கு சூர்யா 40 படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு சூர்யாவின் பிறந்தநாள் ட்ரீட்டாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா 40 ஃபஸ்ட்லுக் போஸ்டரை கபிலன் வடிவமைத்துள்ளார். இவர் தான் சூர்யாவின் வாடிவாசல் ஃபஸ்ட்லுக்கையும் வடிவமைத்துள்ளார். இதனால் இதுவும் சூர்யா ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா 40 படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் என்ட்ரி ஆகி உள்ளார்.


Click it and Unblock the Notifications











