யுஏ சான்று பெற்ற விக்ரமின் மகான்...எப்போ ரிலீஸ் தெரியுமா ?

சென்னை : விக்ரமின் 60 வது படமாக உருவாக்கப்பட்டுள்ள மகான் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

விக்ரம், துருவ் விக்ரம் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள மகான் படத்தை கார்த்திக் சுப்பராஜ் எழுதி, இயக்கி உள்ளார். 2022 ம் ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மகான் இருந்து வருகிறது.

ஹீரோ - வில்லன் ரோலா

ஹீரோ - வில்லன் ரோலா

மகான் படத்தில் துருவ் விக்ரம், போலீஸ் ரோலிலும், விக்ரம் மகான் என்ற கேங்ஸ்டர் ரோலிலும் நடித்துள்ளனராம். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனந்த் உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.

இறுதிக்கட்ட பணிகள்

இறுதிக்கட்ட பணிகள்

ஆக்ஷன் த்ரில்லர் படமான மகான் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பேனரில் லலிதா குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்து, தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

வெறித்தனமான சூறையாட்டம்

வெறித்தனமான சூறையாட்டம்

மகான் படத்தின் ஃபஸ்ட்லுக் டீசர், சிங்கிள் டிராக் என அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதுவும் ஃபஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட்ட சூறையாட்டம் பாடல் பட்டையை கிளப்புவதாக அமைந்திருந்தது. இதோடு மேக்கிங் வீடியோவும் இணைத்து வெளியிடப்பட்டது.

யுஏ வழங்கிய சென்சார்

யுஏ வழங்கிய சென்சார்

இந்நிலையில் மகான் படம் சென்சார் பரிந்துரைக்கும் அனுப்பப்பட்டு, ஒப்புதலையும் பெற்றுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்று வழங்கி உள்ளது. இதனால் டீசர் மற்றும் டிரைலர் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகான் படம் தியேட்டரில் இல்லாமல் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

எப்போ ரிலீஸ் தெரியுமா

எப்போ ரிலீஸ் தெரியுமா

அமேசான் பிரைம் வீடியோவில் பெரிய தொகைக்கு மகான் படம் விற்கப்பட்டுள்ளதாம். 2022 ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் மூன்றாவது வாரத்தில் மகான் படம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X