அட செம தகவலா இருக்கே...பீஸ்ட் படத்திற்கு விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை : பீஸ்ட் படத்தின் மொத்த பட்ஜெட், இந்த படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் பற்றிய மொத்த விபரமும் தற்போது வெளியாகி உள்ளது. இதைத் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமாக உண்மை தானா என கேட்டு வருகிறார்கள்.

விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். பீஸ்ட் ரிலீசிற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. பீஸ்ட் படம் பற்றிய அனைத்து தகவல்களையும் ரசிகர்கள் கொண்டாடி, டிரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

5 மொழிகளில் ரிலீஸ்

5 மொழிகளில் ரிலீஸ்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படம் தமிழகத்தில் மட்டும் 800 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் 5 மொழிகளில் பீஸ்ட் படத்தை ரிலீஸ் செய்ய போகிறார்கள். இந்தியில் ரா என்ற பெயரில் இந்த படம் ரிலீசாக உள்ளது.

இது தான் பீஸ்ட் கதையா

இது தான் பீஸ்ட் கதையா

விஜய் ரா ஏஜன்டாக நடிக்கும் இந்த படத்தில் சென்னையில் முக்கிய மால் ஒன்றில் புகுந்த தீவிரவாதிகள், அங்கு இருப்பவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து, அரசிடம் பேரம் பேசுகிறார்கள். தங்கள் இயக்கத்தின் தலைவனை சிறையிலிருந்து விடுவிக்க கேட்கிறார்கள். அந்த சமயத்தில் அதே மாலில் ரா ஏஜன்டான வீரராகவன் ரோலில் நடிக்கும் விஜய்யும் இருக்கிறார். அவருக்கு தகவல் சொல்லி, மக்களை காப்பாற்ற அசையின்மென்ட் கொடுக்கப்படுகிறது. இதற்கிடையில் தீவிரவாதிகள் தலைவனை விடுவிக்கும் முடிவுக்கு அரசு வருகிறது. அதற்குள் தீவிரவாதிகளை அழித்து, விஜய் மக்களை காப்பாற்றுவது தான் படத்தின் கதை.

பீஸ்ட் படம் காப்பி இல்லை

பீஸ்ட் படம் காப்பி இல்லை

இது மணி ஹெய்ஸ்ட், கூர்கா படங்களின் காப்பி கிடையாது. பீஸ்ட் தனித்துவமான கதை என்றும், இந்த படத்தில் 60 சதவீதம் ஆக்ஷன், 40 சதவீதம் காமெடி இருப்பதாகவும் டைரக்டர் நெல்சன் கூறி உள்ளார். இதனால் படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

பீஸ்ட் படத்தில் விஜய்யின் சம்பளம்

பீஸ்ட் படத்தில் விஜய்யின் சம்பளம்

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக பீஸ்ட் படத்தின் பட்ஜெட், விஜய்யின் சம்பளம் போன்ற விபரங்கள் வெளியாகி உள்ளன. பீஸ்ட் படத்தின் மொத்த பட்ஜெட் 175 கோடி. இதில் விஜய்க்கு சம்பளமாக மட்டும் 80 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாம். டைரக்டர் நெல்சனுக்கு 8 கோடியும், இசையமைப்பாளர் அனிருத்திற்கு 4 கோடியும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற நடிகர், நடிகைகளுக்கு சம்பளமாக 8 கோடி வழங்கப்பட்டுள்ளது. விளம்பரம், விநியோகம் உள்ளிட்ட தயாரிப்பு பணிகளுக்காக 75 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாம்.

Recommended Video

KGF and Beast ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஆதி | Siddy audio launch
இத்தனை கோடி வியாபாரமா

இத்தனை கோடி வியாபாரமா

பீஸ்ட் படம் ரிலீசிற்கு முன்பு 222 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாம். இதில் பட்ஜெட் தொகையான 175 கோடி போக, தற்போது வரை 47 கோடி லாபம் பார்க்கப்பட்டுள்ளது. இன்னும் ரிலீசிற்கு பிறகு ஆன்லைன் டிக்கெட் விற்பனை, கலெக்ஷன் உள்ளிட்டவைகள் மீதம் இருப்பதால், பீஸ்ட் படத்தால் நஷ்டம் ஏற்படாது. இனி வருவது அனைத்தும் லாபக் கணக்கிலேயே சேரும். ரிலீசிற்கு முன்பே போட்ட பணத்தை எடுத்து விட்டதால், மொத்தமாக எத்தனை கோடிகளை வசூல் செய்ய போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X