twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விக்ரம் படம் பார்த்தா தியேட்டரில் தான் பார்க்கணும்...ஏன்னு காரணம் தெரியுமா ?

    |

    சென்னை : சோஷியல் மீடியா, மீடியா என எங்கு திரும்பினாலும் கமலின் விக்ரம் படம் தான் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. விக்ரம் படம் பற்றி வெளியாகும் ஒவ்வொரு தகவலும் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து வருகிறது. விக்ரம் படம் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Recommended Video

    சஸ்பென்ஸை உடைத்த கமல் | Vikram | Kamal Hassan #PressMeet

    பாக்ஸ் ஆபீசில் மிகப் பெரிய தொகையை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரீ ரிலீஸ் டிக்கெட் விற்பனையிலேயே 200 கோடியை இந்த படம் வசூல் செய்து விட்டதால் படம் ரிலீசானதும் நிச்சயம் வெகு விரைவிலேயே 500 கோடி கிளப்பில் இணைவதுடன், வசூலில் புதிய சாதனை படைக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் விக்ரம் படத்தை பார்க்க வேண்டும் என்றால் தியேட்டரில் மட்டுமே பார்க்க வேண்டும் என அனைவரும் கூறி வருகின்றனர். எதற்காக இப்படி சொல்கிறார்கள் என்பதற்கு 5 முக்கியமான காரணங்களை கூறுகிறார்கள். அவை என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

    ரொம்ப ஃபிளாட்டா இருக்க.. அந்த இடத்தை பெரிதாக்குன்னு கமெண்ட் பண்ணாங்க.. அனன்யா பாண்டே ஆதங்கம்!ரொம்ப ஃபிளாட்டா இருக்க.. அந்த இடத்தை பெரிதாக்குன்னு கமெண்ட் பண்ணாங்க.. அனன்யா பாண்டே ஆதங்கம்!

    கமலின் ஆக்ஷன் அவதாரம்

    கமலின் ஆக்ஷன் அவதாரம்

    விக்ரம் படத்தில் கமல், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ரோலில் நடித்துள்ளார். மொத்தமாக ஆக்ஷன் மோடிற்கு மாறிய கமலை இந்த படத்தில் பார்க்கலாம். இந்த படத்தில் கமல் நடித்துள்ள ரோலுக்கும், 1986 ல் அவர் நடித்து வெளிவந்த விக்ரம் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. டை்டடில் மட்டுமே ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது. கச்சிதமாக ஆக்ஷன் படமாக இது அமைக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பி உள்ளதை போலவே, சென்டிமென்ட் காட்சிகளிலும் கமல், பிரம்மிக்க வைக்கும் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மகாநடி படத்தில் எத்தனை செகண்டில், எத்தனை சொட்டு கண்ணீர் வர வேண்டும் என கேட்டு சாவித்ரி நடிப்பதை போல் ஒரு சீன் வைத்திருப்பார்கள். அப்படி நிஜமாகவே கமல் அழுவது போன்ற சீனில், 3 வது செகண்டில் கண்ணீர் கன்னத்தில் வழிய வேண்டும் என லோகேஷ் கேட்க, அதே போல் நடித்தாராம் கமல். செட்டில் உள்ள அனைவரும் இதை பார்த்து மிரண்டு போனார்களாம்.

    வில்லனாக விஜய் சேதுபதி

    வில்லனாக விஜய் சேதுபதி

    விக்ரம் படத்தில் மெயின் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். முந்தைய எந்த படத்துடனும் ஒப்பிட முடியாத அளவிற்கு விஜய் சேதுபதியின் கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளதாம், அவரின் லுக்கும் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கமலுக்கும், விஜய் சேதுபதிக்கும் நடிப்பில் செம போட்டி நடந்துள்ளதாம். கமல்- விஜய் சேதுபதி இருவரும் ஒன்றாக வரும் காட்சிகளில் தியேட்டரில் அனல் பறக்குமாம்.

    முக்கிய ரோலில் ஃபகத் ஃபாசில்

    முக்கிய ரோலில் ஃபகத் ஃபாசில்

    மலையாள நடிகரான ஃபகத் ஃபாசில், தற்போது தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகராக மாறி வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் துவங்கி, ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். விக்ரம் படத்திற்காக லோகேஷ் கனகராஜ், ஃபகத் ஃபாசிலிடம் பேசிய போது, உங்கள் டைரக்ஷன் எனக்கு ரொம்ப பிடிக்கும். கைதி படம் சூப்பராக இருந்தது. உங்கள் படத்தில் நடிக்கிறேன். ஆனால் ஹீரோவாக நடிக்க சொல்லாதீர்கள் என கேட்டுள்ளார். இருந்தாலும் விக்ரம் படத்தில் மிக முக்கியமான ரோலில் ஃபகத் ஃபாசில் நடித்திருக்கிறார். இவருடைய ரோல் தான் கதையை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லுமாம். இவர் தவிர நரேன், காளிதாஸ் ஜெயராம், செம்பன் வினோத் என பல கேரக்டர்கள் பலத்திற்கு பெரிய பலம் சேர்த்துள்ளதாம்.

    லோகேஷ் கனகராஜ் டைரக்ஷன்

    லோகேஷ் கனகராஜ் டைரக்ஷன்

    கமலின் அதிதீவிர ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ். அதனால் அவர் கமலை வைத்து எப்படி படம் இயக்கி இருக்கிறார் என்பதே படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. ஏற்கனவே கைதி, மாஸ்டர் படங்களில் லோகேஷின் டைரக்ஷன் மீது அதிக எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருப்பதால் விக்ரம் படத்தில் அந்த எதிர்பார்ப்பு இரண்டு மடங்காகி உள்ளது. ஒவ்வொரு கமல் ரசிகரையும் கவரும் விதமாக நிச்சயம் இந்த படத்தை எடுத்திருப்பார் என அனைவரும் நம்புகிறார்கள்.

    அனிருத்தின் இசை

    அனிருத்தின் இசை

    சபாஷ் நாயுடு, இந்தியன் 2 என கமலின் இரண்டு படங்கள் தாமதமாகி விட்டதால் கமலுடனண அனிருத் இணைந்துள்ள முதல் படம் விக்ரம். அனிருத் இதில் தனது பெஸ்ட்டை கொடுத்து ரசிகர்களிடம் சபாஷ் வாங்கி உள்ளார். பாடல்களில் சபாஷ் வாங்கியவர் பேக்கிரவுண்ட் இசையில் என்ன செய்திருக்கிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். விக்ரம் படத்திற்காக ஸ்பெஷல் டிராக் ஒன்றை அனிருத் அமைத்துள்ளாராம். அதனால் அந்த மிரட்டல் இசையை தியேட்டரில் கேட்டால் தான் நன்றாக இருக்குமாம்.

    English summary
    Kamalhaasan's Vikram has grabbed the attention of everyone and the film is set to hit the big screens on June 3rd. The film is set to create records at the box office. Ahead of release, take a look at five reasons why Kamal's Vikram should be watched only in theatres.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X