விக்ரம் டிரைலரில் வரும் அந்த குழந்தை யார் தெரியுமா... யார் அந்த விக்ரம் ?
சென்னை : விக்ரம் டிரைலரில் காட்டப்படும் அந்த குழந்தை யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த குழந்தையை பற்றிய தகவலை கேட்டால் படத்தின் மொத்த கதையுமே சொல்கிறார்கள். படத்தின் கதை பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது.
கமலின் விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்ட படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் பல கேள்விகளை உருவாக்கி உள்ளது. அதோடு படத்தின் கதை பற்றிய ஆர்வமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக டைட்டில் ரோலான விக்ரம் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Recommended Video

யார் அந்த குழந்தை
விக்ரம் டிரைலரில் ஒரு குழந்தை இருப்பது போலவும், கமல் கண்ணீர் விடுவது போலவும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதிரடி ஆக்ஷன், அனல் பறக்கும் டிரைலரில் எதற்காக இது என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். அதே போல் டிரைலரின் முடிவில் கமல், விக்ரம் என சத்தமாக கத்துவது போல் காட்சி இடம்பெற்றிருக்கும். அப்படியானால் கமல் கேரக்டர் பெயர் விக்ரம் இல்லையா. அப்போ யார் அந்த விக்ரம் என்ற கேள்வியும் எழுகிறது.

இது தான் படத்தின் கதையா
லேட்டஸ்ட் தகவலின் படி, டிரைலரில் காட்டப்படும் அந்த குழந்தை தான் விக்ரம். இந்த குழந்தை கமலின் மகன் தானாம். கமல் இளமை தோற்றத்தில் வரும் பிளாஷ் பேக் காட்சிகளில் தான் கமலுக்கு ஜோடி உள்ளதாம். மனைவியை இழந்த கமல், மகனுடன் தனியாக வசித்து வருகிறார். டிரைலரில் கமல் பேசுவதாக வரும் டயலாக்குகள், அந்த குழந்தையிடம் கமல் பேசும் டயலாக்காம்.

இவர் தான் அந்த விக்ரமா
கமல் தனது பிளாஷ்பேக் பற்றி சொல்லி, தனது மனைவி இறந்தது பற்றி பேசும் போது தான் கண்ணீர் விடுவதான காட்சிகள் இடம்பெறுகிறதாம். கமலின் மகனாக, விக்ரம் என்ற டைட்டில் ரோலில் தான் காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ளாராம். படத்தில் முக்கியமான ரோல் என்பதால் அவர் பற்றிய சஸ்பென்ஸ் வைக்க தான் டிரைலரில் காளிதாஸ் ஜெயராம் இடம்பெறவில்லையாம்.

அட ஆமாம்...டிரைலரில் இவர் இல்லையே
டிரைலர் முழுவதும் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் சுற்றியே அமைக்கப்பட்டுள்ளதால் மற்ற கேரக்டர்கள் மீது யாருடைய கவனமும் செல்லவில்லை. குறிப்பாக காளிதாஸ் ஜெயராமின் ரோல் பற்றி எந்த தகவலும் வெளியிடாததற்கு இது தான் காரணமாம். அவரது ரோல் தொடர்ந்து சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளதாம். சூர்யாவின் ரோல் பற்றிய தகவலையும் ரகசியமாக வைக்க நினைத்தும் அது கசிந்து விட்டதாக நேற்றைய விழாவில் லோகேஷ் கனகராஜ் கூறினார். அதே சமயம் டிரைலரில் சூர்யா வரும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications











