ரோலக்ஸிற்கு பின் இப்படி ஒரு பிளான் இருக்கா...இதை யாருமே சொல்லலியே
சென்னை : விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கேரக்டர் செம பாப்புலர் ஆகி விட்டது. ரோலக்ஸ் என்ற பெயர் தற்போது தனி பிரான்ட் பெயராகவே மாறி விட்டது.
டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ள விக்ரம் படம் உலகம் முழுவதும் 200 கோடி வசூலை கடந்துள்ளது. விக்ரம் படத்தின் வசூல் நாளுக்கு நாள் மளமளவென உயர்ந்து வருகிறது.

டீமுக்கு பரிசு கொடுக்கும் கமல்
இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தான் நடித்த படமான விக்ரம் படம் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றுள்ளதால், கமல் செம ஹேப்பி ஆகி உள்ளார். இந்த சந்தோஷத்தை கொண்டாடுவதற்காக டைரக்டர் லோகேஷ் கனகராஜிற்கு காஸ்ட்லி காரை பரிசாக வழங்கினார். அசிஸ்டென்ட் டைரக்டர்கள் 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளை பரிசாக வழங்கி உள்ளார்.

சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச்
இதைத் தொடர்ந்து இன்று சூர்யாவை அவரது வீட்டிற்கே சென்று, நேரில் சந்தித்த கமல், சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார். ஏற்கனவே விக்ரம் 3 படத்தில் சூர்யா நடிப்பதை உறுதி செய்து விட்ட கமல், நேற்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க வெளியிட்ட வீடியோவில், அன்பிற்காக மட்டுமே விக்ரம் படத்தில் சூர்யா நடித்தார். அதற்கு சேர்த்து நன்றியை விக்ரம் 3 ல் காட்ட முடிவு செய்திருப்பதாக கூறினார்.

இது உங்களுக்கு சாதாரண பரிசா
அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கு பைக், சூர்யாவிற்கு வெறும் வாட்ச் பரிசா என்று கூட சிலர் கேட்டு வருகின்றனர். ஆனால் சூர்யாவிற்கு தற்போது கமல் பரிசாக வழங்கி உள்ள ரோலக்ஸ் வாட்ச்சின் குறைந்தபட்ச விலையே ரூ.4 லட்சமாகும்.ஒரு ரோலக்ஸ் வாட்ச் தயாரிக்க ஒரு ஆண்டு ஆகுமாம். இதன் ஸ்பேர் பார்ட்ஸ் அனைத்தையும் ரோலக்ஸ் நிறுவனமே தயாரித்து, கைகளால் மட்டுமே இந்த வாட்ச் வடிவமைக்கப்படுகிறது.

கமல் சொன்ன தகவல்
விக்ரம் படத்தில் ரோலக்ஸ் ரோலில் 10 நிமிட காட்சிகளில் நடிப்பதற்காக சம்பளம் எதுவும் வாங்கவில்லையாம் சூர்யா. இதற்கு பதிலாக விக்ரம் 3 படத்திற்காக சூர்யாவிற்கு மிகப் பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video

ரோலக்ஸ் பின்னால் இப்படி ஒரு பிளானா
இதுவரை சூர்யா நடித்த ரோலக்ஸ் ரோல் நெகடிவ் ரோல். அடுத்த படத்தில் வில்லனாக நடிக்க போகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் உண்மை அது இல்லையாம். சூர்யா நடித்த ரோலக்ஸ் ரோல், நெகடிவ் கேரக்டர் கிடையாதாம். பாசிடிவ் கேரக்டர் தானாம். சூர்யா நடித்த ரோலக்ஸ் கேரக்டரை தனிக்கதையாக உருவாக்க திட்டமிட்டுள்ளார்களாம். ரோலக்ஸ் என்ற சொல்லுக்கு எந்த அர்த்தமும் கிடையாது என ரோலக்ஸ் வாட்ச் நிறுவனமே சொல்லி உள்ளது. ஆனால் ரோலக்ஸ் என்றாலே ஆடம்பரம் என்ற இமேஜ் உருவாகி விட்டது. அதனால் தான் அந்த பெயரை சூர்யாவின் கேரக்டருக்கு வைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











