வலிமை எத்தனை மணிக்கு ரிலீஸ் தெரியுமா... லீக்கான போனி கபூரின் செம மாஸ்டர் பிளான்

சென்னை : அஜித் நடித்துள்ள வலிமை படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் போனி கபூர் சில மாஸ்டர் பிளான்களை வகுத்துள்ளாராம். இது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

ஹச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரித்துள்ள வலிமை படம் 2019 ம் ஆண்டு துவங்கப்பட்டது. கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப்போய், பல தடைகளை தாண்டி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த வாரம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்பு, எதிர்பார்ப்பிற்கு பிறகு பிப்ரவரி 24ம் தேதி வலிமை உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

முதல் அஜித் படம் வலிமை

முதல் அஜித் படம் வலிமை

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில், உலகின் பல நாடுகளிலும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ள முதல் அஜித் படம் வலிமை தான். ரிலீசுக்கு முன்பே இருமடங்கு லாபத்தை சம்பாதித்து விட்ட வலிமை படம் ரிலீசான பிறகு எத்தனை கோடிகளை சம்பாதிக்க உள்ளது என்பதை பார்க்க அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

ப்ரொமோஷனே இல்லாமல் மாஸ்

ப்ரொமோஷனே இல்லாமல் மாஸ்

அதுவும் நீண்ட இடைவேளைக்கு பிறகு தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுடன் ரிலீசாக உள்ள பெரிய நடிகரின், பெரிய பட்ஜெட் படம் என்பதால் முதல் நாள் வசூல் எவ்வளவு இருக்கும் என்ற த்ரில்லிங்கான உணர்வு அனைவரிடமும் நிலவுகிறது. எந்த வித ப்ரொமோஷனும் இல்லாமல், ரசிகர்களின் கிரேசை மட்டும் வைத்து வலிமை படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

எத்தனை மணிக்கு வலிமை ரிலீஸ்

எத்தனை மணிக்கு வலிமை ரிலீஸ்

லேட்டஸ்ட் தகவலின் படி, வலிமை படம் தமிழகத்தில் மட்டும் 700 முதல் 1000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட் படி ரிலீஸ் செய்யப்பட உள்ள வலிமை படத்தின் ஃபஸ்ட் டே ஃபஸ்ட் ஷோ அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட உள்ளதாக பல மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியாகி விட்டது. ஆனால் வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது பல மடங்கு அதிகரித்திருப்பதால், படத்தின் ரிலீஸ் பற்றி மற்றொரு மாஸ்டர் பிளானை வகுத்துள்ளாராம் தயாரிப்பாளர் போனி கபூர்.

போனி கபூரின் மாஸ்டர் பிளான் இதுதானா

போனி கபூரின் மாஸ்டர் பிளான் இதுதானா

ஏற்கனவே திட்டமிட்டபடி ஃபஸ்ட் ஷோவை அதிகாலை 4 மணிக்கு திரையிட ஒரு பிளான் இருந்தாலும், ரசிகர்களின் ஆர்வத்தை பார்த்து நள்ளிரவு 1 மணிக்கு ஃபஸ்ட் ஷோவையும், 4 மணிக்கு இரண்டாவது ஷோவையும் திரையிடலாமா என போனி கபூர் ஆலோசித்து வருகிறாராம். காலை 4 மணி ஷோ உறுதியாகி விட்ட நிலையில், ஒரு மணி ஷோ பற்றி இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லையாம்.

Recommended Video

Ajith Sir இதை சொல்லும்போது வெக்கமா வரும் !Valimai Villain First Exclusive Tamil Interview
தியேட்டர் எல்லாம் ஹவுஸ்ஃபுல்

தியேட்டர் எல்லாம் ஹவுஸ்ஃபுல்

இதுவரை கிடைத்த தகவலின் படி தமிழகத்தில் வலிமை ரிலீசாகும் அத்தனை தியேட்டர்களிலும் முதல் நாள் ஷோவிற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாம். அத்தனை தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல் போர்டுடன் வலிமை ரிலீசாக உள்ளதாம். இந்த தகவல் அஜித் ரசிகர்களை அளவில்லாத உற்சாகத்தை தந்துள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X