விருது அறிவிக்கப்பட்ட போது சூர்யா என்ன பண்ணிட்டிருந்தார்...சுதா கொங்கரா சொன்ன சுவாரஸ்ய தகவல்

சென்னை : டைரக்டர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடித்து 2020 ம் ஆண்டு ரிலீசான படம் சூரரைப் போற்று. கேப்டன் கோபிநாத்தின் பயோபிக்காக இந்த படம் உருவாக்கப்பட்டது.இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி, மாஸ் ஹிட் கொடுத்த படம் இது.

Recommended Video

Soorarai Pottru National Award | ஜெயிச்சிட்டோம் மாறா | வென்று காட்டிய சூரரைப் போற்று *India

சாமானிய மக்களுக்கும் விமான பயணத்தை சாத்தியமாக்க குறைந்த கட்டணத்தில் விமான பயணம் என்பதை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. சூர்யாவின் 2டி நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்திருந்தது.இந்த படத்தில் மாறன் என்ற ரோலில் சூர்யா நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சூர்யாவை மாறன் என்று தான் கூப்பிட்டு வந்தனர்.

கொரோனா தொற்று காலத்தில் ஓடிடியில் இந்த படத்தை ரிலீஸ் செய்ததற்காக கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் இந்த படம் எதிர்ப்புகளை மீறி ரசிகர்களின் ஆதரவுடன் சர்வேதச கவனத்தை ஈர்த்து, 35 க்கும் அதிகமான சர்வதேச விருதுகளை வென்றது. ஆஸ்கர் விருது வரை சென்றது.

5 விருதுகளை வென்ற சூரரைப் போற்று

5 விருதுகளை வென்ற சூரரைப் போற்று

இந்நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகளில் சூரரைப் போற்று படம் முக்கிய பிரிவுகளில் 5 விருதுகளை வென்றது. இந்த படத்தில் நடித்த சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சூர்யா மற்றும் சூரரைப் போற்று டீமுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரீரிலீசான சூரரைப் போற்று

ரீரிலீசான சூரரைப் போற்று

சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் படங்கள் சென்னையில் உள்ள தியேட்டர்களில் 3 நாட்களுக்கு ரீ ரிலீஸ் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சமயத்தில் சூரரைப் போற்று படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது. இந்நிலையில் சுதா கொங்கரா தனது பேட்டியில் சுவாரஸ்ய தகவல் ஒன்றை சொல்லி உள்ளார்.

சூர்யா என்ன பண்ணிட்டு இருந்தார்

சூர்யா என்ன பண்ணிட்டு இருந்தார்

சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருது கிடைத்தது தொடர்பாக சுதா கொங்கராவிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில், விருது அறிவிக்கப்பட்ட சமயத்தில் மாறன் (சூர்யா) அமெரிக்காவில் இருந்தார். அந்த சமயத்தில் அவர் தூங்கிக் கொண்டிருந்தார். அதனால் 3- 4 மணி நேரம் தாமதமாக தான் அவருக்கு விருது கிடைத்த தகவல் பற்றி தெரிவித்தேன். ஜோதிகாவிற்கு கால் பண்ணி சொன்ன போது, அவர் உற்சாகமாகி, இங்கு என்ன நடந்திருக்கு பார் என சொன்னார்.

ஷாக்கிலிருந்து மீளாத சூர்யா

ஷாக்கிலிருந்து மீளாத சூர்யா

என்னது...5 விருதா? என்ன நடக்குது இங்க? என இப்போது வரை அவர் நம்ப முடியாத ஆச்சரியத்தில், அதிர்ச்சியில் தான் உள்ளார். இன்று காலை கூட அவரது பிறந்தநாள் என்பதால் கால் பண்ணி வாழ்த்து சொன்னேன். எனக்கு தெரிந்து இந்த பிறந்தநாள் அவருக்கு இதுவரை எப்போதும் இல்லாத, மறக்க முடியாத ஸ்பெஷல் பிறந்தநாளாக இருக்கும் என்றார்.

சூர்யா இப்போ எங்கே இருக்கார்

சூர்யா இப்போ எங்கே இருக்கார்

இதைக் கேட்ட ரசிகர்கள், அப்படியானால் தற்போது சூர்யா அமெரிக்காவில் தான் இருக்கிறாரா. பிறந்தநாளை அமெரிக்காவில் கொண்டாட குடும்பத்துடன் சென்றுள்ளாரா என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X