விஜய்யின் மகன் என்ன செய்கிறார் இப்போ...ரசிகர்கள் என்ன கேட்கிறார்கள் ?
சென்னை : தென்னிந்திய சினிமா உலகில் அனைவராலும் கொண்டாடப்படும் ஸ்டார்களில் ஒருவர் விஜய். விஜய்க்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் மிகப் பெரிய ரசிகர்பட்டாளமே உள்ளது.
விஜய் எந்த அளவிற்கு பிரபலமோ அதே அளவிற்கு அவரது மகன் ஜான்சன் சஞ்சய்யும் விஜய் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். பெரிய ஸ்டார்கள் என்ன செய்தாலும் எப்படி வைரலாக்கப்படுகிறதோ அதே போல் அவர்களின் பிள்ளைகளும் என்ன செய்தாலும் வைரலாக்கப்படுகிறது.

அந்த வரிசையில் விஜய்யின் மகன் சஞ்சய், தனது நண்பர்களுடன் இருக்கும் ஃபோட்டோ, மலையாள நடிகர் நிவின் பாலியுடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்கள் ஆகியன செம வைரலாக்கப்பட்டன. சஞ்சய் தனது நண்பர்களுடன், நிவின் பாலியுடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோ விஜய் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டது.
சஞ்சய், தனது தந்தை விஜய்யை போல் சிறு வயதிலேயே சினிமாவிற்கு அறிமுகமானவர். அப்பா விஜய்யுடன் சேர்ந்து சில படங்களில் ஹிட்டான பாடலுக்கு நடனமாடி கலக்கி உள்ளார். இவர் லண்டனில் டைரக்ஷன் பற்றி படித்து வருகிறார்.
சஞ்சய்யிற்கு சினிமா இயக்க வேண்டும் என்பது தான் ஆசையாம். இவர் விரைவில் விஜய் அல்லது மற்றொரு டாப் ஹீரோவை வைத்து படம் இயக்க போவதாக சமீபத்தில் தகவல் பரவியது. ஆனால் இதுவரை அது உறுதி செய்யப்படாத தகவலாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் கையில் மைக், ஃபேக்கஸ் லைட் ஆகியவற்றுடன் இருக்கும் ஃபோட்டோ ஒன்றை சஞ்சய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் அவர் டைரக்டராக தயாராகி விட்டார் என்பது உறுதியாகி உள்ளது. அது பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
சஞ்சய்யிடம் விஜய் ரசிகர்கள் பீஸ்ட் படத்தின் அப்டேட் கேட்டு வருகிறார். விஜய்யின் பேச்சுக்கள் தங்களுக்கு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷனாக இருப்பதாக ரசிகர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











