பீஸ்ட் ரிலீஸ் தேதி எப்போ தான்ப்பா சொல்வீங்க...குமுறும் ரசிகர்கள்

சென்னை : விடாமல் அப்டேட் கேட்டு வலிமை படம் ரிலீசாகி விட்டது. வலிமைக்கு பிறகு பீஸ்ட் படத்திற்கு விடாமல் அப்டேட் கேட்க துவங்கி உள்ளனர் ரசிகர்கள். மற்ற டாப் ஸ்டார்களின் படங்கள், மெகா பட்ஜெட் படங்கள் தொடர்ந்து ரிலீஸ் தேதியை அறிவித்து வரும் நிலையில் சன் பிக்சர்ஸ் இதுவரை பீஸ்ட் ரிலீஸ் தேதியை அறிவிக்கவில்லை.

Recommended Video

Vijay Fans Ask For Beast Update From Mohammad Shami | Filmibeat Tamil

சமீபத்தில் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட போஸ்டரில், பீஸ்ட் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எந்த தேதியில் ரிலீஸ் என்பதை மட்டும் சொல்லவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் செம கடுப்பாகி உள்ளனர்.

செம ட்ரீட் கொடுத்த பாடல்கள்

செம ட்ரீட் கொடுத்த பாடல்கள்

பீஸ்ட் அப்டேட் கேட்ட போது முதலில் ஃபஸ்ட் சிங்கிளாக அரபிக்குத்து பாடலை வெளியிட்டனர். தற்போது ரிலீஸ் தேதியை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் செகண்ட் சிங்கிளாக ஜாலியோ ஜிம்கானா பாடலை வெளியிட்டுள்ளனர். ஆனாலும் இவற்றை செம ட்ரீட்டாக நினைத்தே விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த பாடல்களும் யூட்யூப்பில் அதிக வ்யூஸ்களை பெற்று சாதனை படைத்து வருகின்றன.

எங்கு பார்த்தாலும் பீஸ்ட் தான்

எங்கு பார்த்தாலும் பீஸ்ட் தான்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் காமெடி, பொழுதுபோக்கு படமாக உருவாக்கப்பட்டுள்ள பீஸ்ட் படம் தான் தற்போது டாக் ஆஃப் தி டவுனாக உள்ளது. ஏப்ரல் 13 ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பீஸ்ட் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக மீடியாக்களில் தகவல் பரவி வருகிறது. இருந்தாலும் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

ரிலீஸ் தேதி எப்பப்பா சொல்வீங்க

ரிலீஸ் தேதி எப்பப்பா சொல்வீங்க

ஆனால் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாததற்கு காரணம் சன் பிக்சர்ஸ் இல்லையாம். சென்சார் போர்டு தானாம். சென்சார் போர்டின் க்ளியரன்ஸ் கிடைத்ததும் ரிலீஸ் தேதியை அறிவிக்க சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளதாம். அடுத்த சில நாட்களில் பீஸ்ட் படத்திற்கு சென்சார் ஒப்புதல் கிடைத்து விடுமாம். ரிலீஸ் தேதியை மோஷன் போஸ்டர் அல்லது விஜய், நெல்சன், அனிருத் இருக்கும் ஸ்பெஷல் வீடியோவுடன் வெளியிட பிளான் செய்திருக்கிறார்களாம்.

செம ஃபீஸ்ட் காத்திருக்கா

செம ஃபீஸ்ட் காத்திருக்கா

பீஸ்ட் ஆடியோ வெளியீட்டு விழா இல்லை என சொல்லப்படுவதால் அதற்கு பதிலாக நேரடியாக ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய போகிறார்களாம். அதனால் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த விஜய்யின் மாஸ் ஸ்பீச், ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் நடக்க வாய்ப்பிருக்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X