பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள் இருக்கட்டும்...பிக்பாஸ் யாரு, அவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

சென்னை : டிவி ரசிகர்கள் மட்டுமல்ல, ஓடிடி ரசிகர்களும் தற்போது ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தான். பிக்பாஸ் அல்டிமேட் அடுத்த போட்டியாளர் யார் என தெரிந்து கொள்ள அனைவரும் காத்திருக்கிறார்கள். ஆனால் அனைவரையும் ஈர்த்த கம்பீர பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பது உங்களுக்கு தெரியுமா ?

அதிக ரசிகர்களைக் கொண்ட பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ, ஆரம்பத்தில் இந்தியில் துவங்கப்பட்டு பிறகு மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் துவங்கப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மொழிகளிலும் ஒவ்வொரு பிரபலம் தொகுத்து வழங்கி வருகிறார். பல துறைகளை சேர்ந்த பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்து கொண்டு வருகிறார்.

தொகுப்பாளர், போட்டியாளர்களை விட அதிகமானவர்களை கவர்ந்தவர் பிக்பாஸ் தான். பிக்பாஸிற்கு ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொருத்தர் குரல் கொடுத்து வருகிறார்கள். பொதுவாக பிக்பாஸ் போட்டியாளர்கள், அதை தொகுத்து வழங்குபவருக்கு எவ்வளவு சம்பளம் என்று தான் அனைவரும் கேட்பார்கள். ஆனால் இதுவரை கவனிக்கப்படாமல், இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமானவர்களில் ஒருவரான பிக்பாஸ் யாரும் பெரிதாக யோசித்திருக்க மாட்டார்கள். அவரை பற்றிய தகவல்கள் தான் இங்கே பார்க்க போகிறோம்.

பிக்பாஸ் அல்டிமேட் ப்ரோமோ

பிக்பாஸ் அல்டிமேட் ப்ரோமோ

தமிழில் தற்போது பிக்பாசின் 5 சீசன்கள் முடிந்து, ஓடிடி வெர்சனான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் நாளை துவங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் யார் என்பது தான் சோஷியல் மீடியாவில் மிகப் பெரிய ஹாட் டாக்காக இருந்து வருகிறது. அடுத்த போட்டியாளர் யார் என தினமும் காலையில் ஒரு கெஸ் போட்டோ வெளியிடப்படுகிறது. பிறகு அவர்கள் யார் என்பதை காட்ட ஒரு ப்ரோமோ மாலையில் வெளியிடப்படுகிறது.

இவர் தான் பிக்பாசா

இவர் தான் பிக்பாசா

ஆனால் முகம் தெரியாமல் வெறும் குரலாலேயே அனைவரையும் கவர்ந்திருக்கும் சில டிவி பிரபலங்களில் பிக்பாசும் ஒருவர். தலைவா, முதலாளி, நண்பா, மச்சான், பெரிசு, பிகி என பல சீசன்களில் பல போட்டியாளர்களால் செல்லமாக அழைக்கப்படும் பிக்பாஸ் என்ற கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை. வாய்ஸ் ஆர்டிஸ்ட் சதீஷ் சாரதி (Satiiysh Saarathy)என்ற சாஷோ (sasho). இவர் வெறும் வாய்ஸ் ஆர்டிஸ்ட் மட்டுமல்ல நடிகர், பாடகரும் கூட தான்.

அட இதெல்லாம் தெரியாதே

அட இதெல்லாம் தெரியாதே

உச்சரிப்புக்களில் தனித்திறமை கொண்ட சாஷோ, கணீர் என்ற குரலில், தெளிவாக போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு புரியும் படி கட்டளைகள், வழிகாட்டுதல்களை சொல்லக் கூடியவர். இதே போல் இந்தி பிக்பாஸில் வாய்ஸ் ஆர்டிஸ்ட் அடுல் கபூர், பிக்பாஸிற்கு குரல் கொடுத்து வருகிறறார். 2006 ல் துவங்கப்பட்டது முதல் இவர் தான் குரல் கொடுத்து வருகிறார்.

இவ்வளவு சம்பளமா

இவ்வளவு சம்பளமா

தமிழ் பிக்பாசை தொகுத்து வழங்க கமலுக்கு வாரத்திற்கு ரூ.3 கோடி மேல் சம்பளம் கொடுக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே கூறப்படுகிறது. ஆனால் பிக்பாஸாக குரல் கொடுக்கும் சாஷோவிற்கு பிக்பாஸ் சீசன் 5 க்காக மட்டும் மாதத்திற்கு ரூ.5 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம். மொத்தமாக மூன்று மாதத்திற்கு ரூ.17.5 லட்சம் அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X