இவங்க தான் என் வாழ்க்கை...தனுஷ் யாரை இப்படி சொல்லி இருக்கார் தெரியுமா?

சென்னை : கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், டோலிவுட் என ஹாலிவுட் வரை பிரபலமான நடிகராக உள்ளார் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தனது 16வது வயதில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக தனது அப்பா கஸ்தூரி ராஜாவால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்.

Recommended Video

Grayman 2வில் Dhanushக்கு முக்கிய Character? | Russo Brothers சொன்னது என்ன?

பிறகு தனது அண்ணன் செல்வராகவனுடன் இணைந்து அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்தார். படிப்படியாக வளர்ந்த தனுஷ், தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்று, தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம்,மாறன் போன்ற படங்கள் ஓடிடியில் ரிலீசாகி தோல்வி அடைந்தன. இருந்தாலும் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

தனுஷின் அடுத்தடுத்த படங்கள்

தனுஷின் அடுத்தடுத்த படங்கள்

திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி என தனுஷ் நடித்துள்ள படங்கள் வரிசையாக ரிலீஸ் செய்யப்பட உள்ளன.இதில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ப்ரியா பவானிசங்கர், ராஷி கன்னா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 18 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

தனுஷ் - சிவா ஃபிரண்ட்ஷிப்

தனுஷ் - சிவா ஃபிரண்ட்ஷிப்

இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு பிரபலங்கள் பேசிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. நேற்று, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இடையேயான ஃபிரண்ட்ஷிப் பற்றி டைரக்டர் வெற்றிமாறன் பேசிய வீடியோ வைரலானது. சிவகார்த்திகேயனுக்காக கதை சொல்லச் சொல்லிக் கேட்ட தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு சூப்பர்ஸ்டார் ஆவதற்கான அத்தனை தகுதியும் இருப்பதாக சொன்னதாக தெரிவித்தார்.

இவங்க தான் என் வாழ்க்கை

இவங்க தான் என் வாழ்க்கை

இந்நிலையில் இன்று தனுஷ் பேசிய வீடியோ செம வைரலாகி வருகிறது. விழாவில் பேசிய தனுஷ், என்ன வந்தாலும் பரவாயில்லை. நீ தனி ஆளில்ல. உன் கூட நாங்க இருக்கோம்ன்னு தோளோடு தோள் நிற்கிறார்கள். இந்த நன்றியை மறக்க மாட்டேன். எண்ணம் போல் வாழ்க்கை. எண்ணம் போல் தான் வாழ்க்கை. அது தான் உண்மை. என் எண்ணம் என் ரசிகர்கள் மீது. அவர்கள் தான் என் வாழ்க்கை என பேசினார்.

கொண்டாடும் ரசிகர்கள்

கொண்டாடும் ரசிகர்கள்

ரசிகர்கள் மீது தனுஷ் வைத்துள்ள அன்பை நெட்டிசன்கள் உள்ளிட்ட அவரது ரசிகர்கள் பாராட்டி, கொண்டாடி வருகின்றனர். திருச்சிற்றம்பலம் படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள் படத்திற்கு முன்பே செம ட்ரீட் கிடைத்தது போல் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X